இதுக்கெல்லாம் அழலாமா…சினிமான சில அடிகள் விழ தான் செய்யும்…பிரபல நடிகரை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்…!

Author: Selvan
9 January 2025, 1:02 pm

ஒரு பட வெற்றியால் அடுத்த தளபதி ஆகிட முடியுமா..

தமிழ் சினிமாவில் வெளியாகக்கூடிய படங்களுக்கு தன்னுடைய வித்தியாசமான ஸ்டைலால் விமர்சனம் செய்து பிரபலம் ஆனவர் ப்ளூ சட்டை மாறன்.இவர் சினிமா விமர்சனத்தை தாண்டி சமீப காலமாக பல சினிமா பிரபலங்களை திட்டியும் ஆதரித்தும் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய பதிவை வெளியிட்டு வருகிறார்.

Sivakarthikeyan criticism

அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய படங்கள் நல்லா ஓடி வசூலை பெற்றாலும்,எனக்கு தகுந்த பாராட்டு கிடைப்பதில்லை என கூறியிருப்பார்,மேலும் தன்னை காலி செய்ய சோசியல் மீடியாவில் ஒரு கூட்டமே காத்துகொண்டு இருப்பதாக பேசியிருந்தார்,தற்போது இவருடைய பேச்சுக்கு ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயனை தாக்கி கருத்து வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்க: அந்த ஒரு இரவு மட்டும் சில்க் ஸ்மிதாவுடன்.. மறக்கவே முடியாது : பிரபல இயக்குநர் பகீர்!

அதில் சென்டிமென் டா பேசுறத நிறுத்திட்டு வாலி, பருத்தி வீரன், பிதாமகன், அசுரன் போன்று சிறந்த நடிப்பை வெளிப்படுத்துங்கள்,பாராட்டு தானாக வரும் என கூறியுள்ளார்,மேலும் சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படத்தில் நடித்த தினேஷை தான் எல்லோரும் பாராட்டினார்கள்,அதற்காக ஹரிஷ் கல்யாணம் சரியாக நடிக்கவில்லை என அர்த்தமா..சிறந்த கதையை தேர்ந்தெடுத்து நடிப்பை வெளிப்படுத்துங்கள் என ஒப்பிட்டு பேசியுள்ளார்.

ஒரே ஒரு அமரன் ஓடியதும்.. நீங்கதான் அடுத்த விஜய் என ஒரு க்ரூப் காமடி செய்தால்.. இன்னொரு க்ரூப் கலாய்க்கத்தான் செய்யும்.இதைவிட பல மடங்கு விமர்சனங்களை தாண்டித்தான் ரஜினி, கமல் விஜய், அஜித் இந்த இடத்தில் இருக்கிறார்கள்.

லேசா கீறுனதுக்கே.. இப்படி அழுதா எப்படி தம்பி? நடிப்பை மேலும் இம்ப்ரூவ் பண்ற வழியை பாருங்க…என பதிவிட்டுள்ளார்.

சிலர் இந்த பதிவிற்கு ஆதரவு தெரிவித்தாலும்,சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை தாக்கி வருகின்றனர்.

  • Mohanlal Empuraan Controversy பூகம்பமாய் வெடித்த ‘எம்புரான்’ சர்ச்சை..மன்னிப்பு கேட்ட மோகன்லால்..!