சரக்கு அடிச்சுகிட்டுதான் மியூசிக் போட்டேன் – பிரபல இசையமைப்பாளர் கலகல..!

Author: Vignesh
23 January 2024, 11:15 am

நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

ashok selvan

தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது. அந்த படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங்குடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இருவரது கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக ஒர்கவுட் ஆகியிருந்தது.

blue star

இவர்கள் நிஜத்தில் காதலித்தால் கூட சிறந்த ஜோடியாக இருப்பார்கள் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அசோக் செல்வனுக்கு பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துக்கொண்டார். கீர்த்தி பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலியில் இயற்கை சார்ந்த முறையில் நடைபெற்ற இத்திருமணம் பலரது கவனத்தை ஈர்த்தது.

blue star

இந்நிலையில், திருமணம் ஆகிய பின்னர் இருவரும் இணைந்து ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் எஸ் ஜெயக்குமார் இயக்கத்தில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.

blue star

சமீபத்தில், நடந்த இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பேசுகையில், எனக்கு அதிகமாக இப்படத்தில் உதவிய அறிவுக்கு நன்றி, பொதுவாக எல்லா படங்களிலும் இசைக்கும் போது உதவி இயக்குனர்கள் பலர் இருப்பார்கள். ஆனால், இப்படத்தில் நான் அறிவு ஜெயக்குமார் மட்டுமே இருப்போம்.

govind vasantha

கேரளாவில் நான் பாட்டுக்கு தண்ணி அடிச்சிட்டு ஜாலியா தான் கம்போஸ் செய்தேன். பின்னணி இசைக்கும் அப்படித்தான் தண்ணி அடிச்சிட்டு பண்ணேன். யாரும் என்னை தொந்தரவு செய்யவில்லை என்று வெளிப்படையாக இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா தெரிவித்துள்ளார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 263

    0

    0