தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் என்ற இடத்தைப் பிடித்தவர் சூரி. இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொண்டு எண்ணிக்கை விட அதிகமாக பரோட்டா சாப்பிட்டதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்த காமெடி நடிகராக இடத்தைப் பிடித்தார் .
நடிகர் சூரி:
தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் விஷால், விஜய், அஜித் என பல சூப்பர் ஹிட் ஹீரோக்களின் படங்களுடன் நடித்து பிரபலமான காமெடி நடிகராக பலம் வந்தார். இதனிடையே அவர் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அசத்திருந்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
அடுத்ததாக சூரியின் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் தான் “கொட்டுக்காளி” பி எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அன்னா பென் நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்த திரைப்படம் நேற்று திரையரங்கில் ரிலீஸ் ஆகி எதிர்மறையான விமர்சனத்தை பெற்றுள்ளது.
கொட்டுக்காளி:
படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதை பெருவாரியான மக்களின் கருத்தாக இருக்கிறது. முன்னதாக ஏற்படத்திற்க்கு நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்டோர் பாராட்டி இருந்தார்கள். ஆனால் படத்தைப் பார்த்து ரசிகர்கள் தற்போது படமே புரியவில்லை என கூறி வருகிறார்கள்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
இந்த நிலையில் இப்படத்தை குறித்து விமர்சனம் செய்திருக்கும் பிரபல விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறன் மனிதர்களின் வாழ்க்கையை சொல்கிறேன் என அவார்ட் படங்களை எடுக்கும் பல பேர் அந்த மனிதர்களாலே படத்தை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு படத்தை எடுத்து விடுகிறார்கள்.
கொட்டுக்காளி படமும் அது போல தான். இந்த படமும் உனக்கு புரிய வேண்டும் என்றால் நீ சினிமாவில் பல டிகிரி முடித்து விட்டு வர வேண்டும் என சொல்வதெல்லாம் சுத்தமான பித்தலாட்டமாக இருக்கு. கதை நகராமல் அப்படியே கட்டுப் போட்டபடி கிடக்கிறது.
கொட்டுக்காளி படத்தில் வரும் ஆட்டோ, ஸ்கூட்டர் எல்லாம் நகருகிறதே தவிர படத்தோட கதை எங்கேயுமே நகரல. கடைசியா கிளைமாக்ஸ் வைக்காமலே நீங்களே ஒரு முடிவு பண்ணிக்கோங்க அப்படின்னு தீர்ப்பு மக்கள் கையில் கொடுத்து செம காண்டாகிட்டாங்க. இப்படத்தை பார்த்து காண்டான ரசிகர்கள் நியாயமா பார்த்தால் சூரியையோ அல்லது படத்தின் இயக்குனரையோ தான் திட்டனும்.
நிர்வாணமா வந்து ஆடுங்க:
ஆனால் அதுக்கு பதிலா இயக்குனர் மிஷ்கின் எங்க அவரை கடுமையா திட்டனும் அப்படின்னு தேடுறாங்க ஏன்னா.. படத்துக்கு முன்னதாக மிகப்பெரிய அளவில் பில்டப் கொடுத்து ப்ரமோஷன் செய்தவர் மிஷ்கின் தான். இந்த படத்தை ப்ரொமோட் செய்வதற்காக நான் நிர்வாணமாக நடனமாட கூட தயார் அப்படின்னு இறங்கி பேசியிருந்தார் மிஸ்கின். அப்படி ஒரு படைப்பு கொட்டுக்காளி திரைப்படம் எனக்கூறி இருந்தவரை இப்ப கூப்பிட்டு குமரனும் போல இருக்கு என ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார் மேலும் இந்த படத்தை பார்த்த பல பேர் மிஸ்டர் மிஷ்கின்…இப்போ வந்து நிர்வாணமா ஆடுங்க என கூறி வம்பு இழுத்து வருகிறார்கள்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.