குரூப்ல டூப்.. சிவகார்த்திகேயனை கலாய்த்து தள்ளிய ப்ளூ சட்டை மாறன்..!

Author: Vignesh
8 August 2024, 11:31 am

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை விமர்சனம் செய்து பிரபலமானவர்களில் ஒருவர் ப்ளூ சட்டை மாறன். இவர் ஆரம்பத்தில் படங்களை மட்டுமே விமர்சித்து வந்தார். தற்போது, நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் விமர்சித்து வருகிறார்.

அந்த வகையில், முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, தனுஷ், என பல ஹீரோக்களை கடுமையாகவும் நக்கல் அடித்தும் ப்ளூ சட்டை மாறன் பேசி அவர்களது ரசிகர்களை கொந்தளிக்கவும் வைத்ததுள்ளார்.

சமீப காலமாக சிவகார்த்திகேயனை தொடர்ந்து சீண்டி வரும் ப்ளூ சட்டை மாறன் அயலான் முதல் இமான் பிரச்சனை வரை தொடர்ந்து விமர்சித்தும் பேசியும் பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது, குரூப்ல டூப் என்ற கேப்சனுடன் எந்த கெட்ட பழக்கம் இல்லாத நடிகர்கள் இதில், உங்க பேவரெட் யாரு என்ற பதிவிட்டிருந்ததை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், சிவகுமார், டி ராஜேந்தர், ஆனந்தராஜ், கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் போன்றவர்களின் படங்கள் இடம்பெற்றிருக்கிறது. சிவகார்த்திகேயனை கலாய்க்க தான் ப்ளூ சட்டை மாறன் இப்படியான பதிவினை வெளிப்படையாகவும், அப்பட்டமாகவும் பகிர்ந்து உள்ளார் என்றும், அவரை கடுமையாக திட்டியும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!