விஜயை ஏமாற்றியது உண்மைதான்.. போங்காட்டம் ஆடியது குறித்து யோகி பாபு ஓபன் டாக்..!

Author: Vignesh
1 August 2024, 5:41 pm

போட் படத்திற்காக அடுத்தடுத்து பிரமோஷன்களில் கலந்துகொண்டு பேசி வரும் யோகி பாபு, சின்ன ஜெயந்தி, கௌரி கிஷனுடன் இணைந்து கல்லூரி மாணவர்களுடன் பேசி இருந்தனர். அப்போது, பேசிய யோகி பாபு விஜயுடன் வாரிசு பட சமயத்தில் ஆடிய கிரிக்கெட் குறித்தும் பேசியுள்ளார்.

அதில், விஜய் உள்ளிட்டவர்களை தான் கிரிக்கெட் விளையாட அழைத்து சென்றதாகவும், விஜய்யிடம் சிட்டிங் செய்ய முயன்றதாகவும் யோகி பாபு கூறியுள்ளார். மேலும், விஜய் டீம் சிக்ஸர் அடித்த நிலையில், அதை 4 என்று கூறி தான் போங்காட்டம் ஆடியதாகவும் ஆனால், விஜய் இது குறித்து சண்டையிட்டு சிக்ஸராக மாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

அப்போது, மூன்று மேட்ச் விளையாடினோம். விஜய விழுந்த எல்லாம் பில்டிங் செய்ததாகவும், யோகி பாபு தெரிவித்துள்ளார். தனக்கு கிரிக்கெட் மற்றும் புட்பால் இரண்டுமே விருப்பத்திற்குரியதாக உள்ளதாகவும் இரண்டையுமே ஓய்வு நேரத்தில் விளையாடி வருவதாகவும் யோகி பாபு அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…