அந்த படத்தை அறிவாளிங்க பார்க்க வேண்டாம்.. வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட பாபி சிம்ஹா..!

Author: Vignesh
20 July 2024, 9:41 am

ஒரு காலத்தில் சிறந்த நடிகராகவும் மிரட்டல் வில்லனாகவும் வளம் வந்த பாபி சிம்ஹா தற்போது எங்கு போய்விட்டார் என்று கேட்கும் அளவிற்கு காணாமல் போய்விட்டார். அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர்களில் ஒருவராக இவர் இருந்தார்.

இவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலத்தில் விறுவிறுப்பாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். தேசிய விருது எல்லாம் பெற்று இருந்தார். ஆனால், இப்போது அவர் அவ்வளவு ஆக்டிவாக படங்களில் நடிப்பது கிடையாது.

Bobby Simha

இதனால், ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, சூது கவ்வும், நேரம் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தார்.

ஜிகர்தண்டா படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் மிரட்டி இருந்தார். அடுத்தடுத்து ஆடாம ஜெயிச்சோமடா, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது. மசாலா படம், உறுமீன் பெங்களூர் நாட்கள், கோ, இறைவி, மெட்ரோ என பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் indian 2 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் கலவையான விமர்சனம் குறித்து இவரிடம் கேட்க நாங்கள் அறிவாளிகளுக்காக படம் எடுக்கவில்லை. ஃபேமிலி ஆடியன்ஸ் இப்படத்தை கொண்டாடுகின்றனர். அது போதும், எங்களுக்கு என கடுமையாக பேச நெட்டிசன் பாபி சிம்ஹாவை வறுத்து எடுத்து வருகின்றனர்.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!