30 வயதில் இந்திய பணக்கார நடிகை ஆன ஆலியா பட் – மொத்த சொத்து எத்தனை கோடி தெரியுமா?
Author: Shree5 September 2023, 11:55 am
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருப்பவர் ஆலியா பட். இவருக்கு பாலிவுட் சினிமாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளன. செக்சியான உடல் வாகு, கவர்ச்சியான தேகம், மின்னும் அழகு, சிவப்பான உதடு, Cute -ஆன கண்கள் என என்றும் இளமையுடன் வலம் வருகின்றார் ஆலியா பட்.

ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தார். தற்போது ஆலியா பட்டும் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருக்கும் ஆலியா பட் கடந்த 2012ம் ஆண்டு வெளியான student of the year படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார்.

அந்த படத்தை தொடர்ந்து ஷாருக்கான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் ஹீரோயின் என்ற அந்தஸ்தை பிடித்தார். அந்த மாதிரியான கேரக்டர் கொடுத்தாலும் அதி முழு ஈடுபாட்டோடு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் பேவரைட் நடிகையாக இடம்பிடித்தார்.

இவர் பிரபல நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாகி பின்னர் அவசர அவசரமாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு அழகான மகளும் இருக்கிறார். இந்நிலையில் ஆலியா பட்டின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது. ஒரு படத்திற்கு ரூ. 20 கோடி சம்பளம் வாங்கும் ஆலியா பட் மொத்த சொத்து ரூ. 560 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
இதில் அவருக்கு சொந்தமான ஆடை Brand நிறுவனம், மும்பையில் 2 பிரம்மாண்ட வீடு, லண்டனில் ஒரு சொகுசு வீடு, பல கோடி மதிப்புள்ள கார்கள், நகை நட்டு என அனைத்தும் அடங்கும். அவரின் ஆடை நிறுவனத்தின் மதிப்பு மட்டும் ரூ.150 கோடி. அந்நிறுவனத்தை தற்போது இரண்டு மடங்கு மதிப்பிற்கு விலை பேசுகிறார்களாம். எனவே ஆலியா நடிப்பையும் தாண்டி தொழிலதிபராக பலகோடி சொத்திற்கு சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.