பிக் பாஸ் பிரபலத்திற்கு புற்றுநோய்…37 வயதில் போராட்ட வாழ்க்கை..!

Author: Selvan
8 December 2024, 7:50 pm

பிக் பாஸ் மூலம் பிரபலமான ஹினா கான்

37 வயதான நடிகை மற்றும் மாடல் அழகி ஹினா கான் ஜம்மு காஷ்மீரை பூர்வீகமாகக் கொண்டவர். தனது மாடலிங் ஆர்வத்தால் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்த ஹினா,பஞ்சாப் மற்றும் ஹிந்தி தொலைக்காட்சிகளில் நடிக்க தொடங்கினார்.

பின்னர் பிக் பாஸ் சீசன் 11 மற்றும் கில்லாடி போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் மூலம் அதிக வரவேற்பைப் பெற்றார்.

Hina Khan Bigg Boss Star

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஹினா கானுக்கு மூன்றாம் நிலை மார்பக புற்றுநோயானது கண்டுபிடிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து அவருக்கு கீமோ சிகிச்சைகள் மற்றும் தேவையான மருத்துவ சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்க: மெய்யழகன் படத்தை பார்த்து கண்ணீருடன் பதிவு… பிரபல பாலிவுட் நடிகர் பாராட்டு..!

அவரது சிகிச்சைக்கான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வரும் ஹினா,சிறுநீரக பையை கையில் வைத்துக் கொண்டு மருத்துவமனையில் நடந்து செல்லும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

போராடும் மன உறுதி

கீமோ சிகிச்சையின் போது தனது முடியை இழந்த புகைப்படத்தையும் பகிர்ந்த ஹினா, மூன்றாம் கட்ட புற்றுநோயை அறிந்து கொண்ட போது மிகவும் சோகமான காலக்கட்டமாக இருந்தது.ஆனால் நான் உறுதியாகவும் வலிமையாகவும் இருக்கிறேன்.இந்த நோயில் இருந்து முழுமையாக மீள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Hina Khan Salman Khan Praise

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சல்மான் கான்,ஹினா கானின் தைரியத்திற்கும் மன உறுதியுக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.ஹினா ஒரு “போர்வீரர்” என்று அவர் கூறியுள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 82

    0

    0

    Leave a Reply