“மேம் ஒரு செல்பி” – அத்துமீறிய ரசிகர்.. பயந்து போன நடிகை கரீனா கபூர்..! வைரலாகும் வீடியோ..!

Author: Vignesh
4 October 2022, 4:26 pm

கரீனா கபூர் தன்னுடைய அடுத்த படத்தின், படப்பிடிப்புக்காக மும்பையில் இருந்து லண்டன் செல்ல விமான நிலையம் வந்த போது, அங்கிருந்த ரசிகர் செய்த காரியம் ஒரு நிமிடம் கரீனாவை நடுங்க வைத்துவிட்டது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

பாலிவுட் திரையுலகில் பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார்கள். தரமான கதைகளில் நடிக்கும் இவர்களுக்கு, எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே… இவர்கள் விமான நிலையம், மற்றும் பொது இடங்களுக்கு வரும் போது, இவர்களுடைய ரசிகர்கள், அவர்களுடன் புகைப்படம் எடுக்க விரும்புகிறார்கள். சில சமயங்களில் நடிகர்களின் அனுமதி இல்லாமலேயே அத்து மீறி செல்பி எடுக்க முயல்வது , நடிகர் – நடிகைகளுக்கு அசவ்கரியத்தி ஏற்படுத்துகிறது.

அந்த வகையில் தான் தற்போது சில ரசிகர்கள் கரீனா கபூரிடம், அத்து மீறி செல்பி எடுக்க போட்டி போட்டதால் அவர் மிகவும் பயந்தபடி அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், ரசிகர் ஒருவர் கரீனா தோல் மீது கை வைக்க வருவது போல் தெரிகிறது, அந்த ரசிகரின் கையை கரீனாவின் பாதுகாவலர் தடுப்பது போன்ற காட்சிகள் உள்ளது.

இந்த சம்பவம் கரீனா மும்பை விமான நிலையத்தில் மகன் ஜஹாங்கீர் மற்றும் அவரது பாட்டியுடன் வந்த போது நடந்துள்ளது. கரீனா தன்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்காக லண்டன் செல்ல அங்கு வந்தார். ஹன்சல் மேத்தா இயக்கும் இந்த படத்தை, ஏக்தா கபூர் தனது பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் பேனரில் தயாரிக்கவுள்ளார். கரீனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த படத்தில் நடிக்க உள்ளது குறித்த தகவலை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 512

    0

    0