சினிமா பயணத்தை ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது வரையிலும் நல்ல கதைக்களை மட்டுமே தேர்வு செய்து நடித்துள்ளார் நடிகர் விஜய்சேதுபதி. அதனால் தான் நடிகர் விஜய்சேதுபதியின் படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்களாக மாறுகிறது. சினிமா உலகில் எவ்வளவு வளர்ச்சியை அடைகிறாரோ, அதே அளவிற்கு தனது குணத்தையும் மாற்றிக் கொண்டு ஓடுகிறார் நடிகர் விஜய்சேதுபதி.
ரசிகர்கள் மத்தியிலும் சரி, நடிகர் விஜய்சேதுபதியை சுற்றி இருப்பவர்களையும் சரி கவர்ந்திருக்கும் வகையில் பேசுவார். மேலும் எல்லோரிடமும் சகஜமாக பழகக் கூடியவர் நடிகர் விஜய்சேதுபதி.
இதனால் அனைவருக்கும் பிடித்தவராக இவர் இருந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டிஎஸ்பி திரைப்படம். நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
அதனை தொடர்ந்து இவர் கையில் விடுதலை, ஜவான் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் பல்வேறு புதிய படங்களிலும் இவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படி திரை உலகில் ஓடும் இவருக்கு ரசிகர்களும் சரி பல நடிகர் நடிகைகளுக்கும் சரி ரொம்பவும் பிடித்தவராக இருக்கிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் பாலிவுட் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இவர் நடித்த நானும் ரவுடிதான் திரைப்படத்தை 100 தடவை பார்த்து உள்ளேன் என கூறியுள்ளார்.
ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகையாம், விஜய் சேதுபதியின் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரவுடிதான் திரைப்படத்தை 100 தடவை பார்த்துவிட்டு, விஜய் சேதுபதிக்கு போன் பண்ணி நான் உங்கள் தீவிர ரசிகை என கூறினாராம்.
மேலும் உங்களது படத்தில் என்னை நடிக்க வையுங்கள், என்னை நினைத்தால் கூப்பிடுங்கள் நான் ஆடிஷனுக்கு வந்து கலந்து கொள்கிறேன் என கூறி இருக்கிறாராம்.. இதைக் கேட்ட விஜய் சேதுபதி ஐய்யயோ என கூறியிருக்கிறாராம் இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜான்வி கபூர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.