விக்கி – நயன் குழந்தைகளை பார்க்க வந்த ஷாருக்கான்: நயனுக்கு ஷாருக் கொடுத்த கிஸ் வைரலாகும் வீடியோ..!

Author: Rajesh
12 February 2023, 5:00 pm

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான படம் கனெக்ட். இவர் தற்போது, அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஜோடியாக ஜவான், மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ஒரு திரைப்படம், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ஒரு திரைப்படம் என அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார்.

nayanthara_updatenews360

ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் அவர்களுடன் நடிப்பதால் விக்னேஷ் சிவன் – நயன்தாரா – அட்லீ – ஷாருக்கான் இவர்களிடையே நல்ல உறவு இருந்து வருகிறது. இதனால், விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தில் பங்கேற்றார் ஷாருக். இதனைத் தொடர்ந்து, தற்போது, விக்கி – நயன் குழந்தைகளை பார்க்க ஷாருக்கான் வந்துள்ளார்.

shahrukh khan - updatenews360

பதான் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜவான். அட்லீ இயக்கும் இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி, நகைச்சுவை நடிகராக யோகிபாபுவும் நடித்து வருகின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜவான் பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மும்பையில் இருந்து சென்னைக்கு திடீர் விசிட் அடித்த ஷாருக்கான், நேற்று இரவு சென்னையில் உள்ள நடிகை நயன்தாராவின் வீட்டுக்கு சென்றுள்ளார். நடிகை நயன்தாராவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரட்டை குழந்தை பிறந்த நிலையில், அந்த குழந்தைகளை பார்ப்பதற்காக சென்னையில் உள்ள நயன்தாராவின் வீட்டுக்கு வந்துள்ளார் ஷாருக்கான்.

ஷாருக்கான் வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அங்கு குவிந்தனர். இதையடுத்து காரில் ஏறி செல்லும் முன் ரசிகர்களை பார்த்து கையசைத்துவிட்டு, வழியனுப்பி வைக்க நடிகை நயன்தாராவுக்கு கிஸ் கொடுத்து விட்டு சென்றார் ஷாருக். இதுகுறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

  • Mohanlal Appreciates Lubber Pandhu Team லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
  • Views: - 633

    0

    1