காட்டிய கவர்ச்சி எல்லாம் போச்சு… ரூ.100 கோடிக்கு உலை வைத்த கீர்த்தி சுரேஷ்..!!
Author: Udayachandran RadhaKrishnan30 December 2024, 6:27 pm
தென்னிந்திய சினிமாவில் கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்த பக்கம் இழுத்து மூடிய நடிகை, பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்ததும் முதல் படத்திலேயே கவர்ச்சியை அள்ளி காட்டினார்.
இது கீர்த்தி சுரேஷ் தானா என இங்குள்ள ரசிகர்கள் வாயை பிளந்தனர். அதுவும் அட்லீ கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய கீர்த்தி, தெறி ரீமேக்கில் அலற விட்டிருந்தார். அட்லிக்கு முதல் இந் படமே பெரும் வெற்றி. 1000 கோடி ரூபாயை அள்ளியது.
இதையடுத்து தெறி ரீமேக்கான பேபி ஜான் படத்தை தயாரிக்க முடிவெடுத்தார். கடந்த கிறிஸ்துமஸ் அன்று வெளியான பேபி ஜான் திரைப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது.
வருண் தவான் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ₹160 கோடி பட்ஜெட்டி உருவான படம் இதுவரை ₹23 கோடி மட்டுமே வசூலித்துள்ளதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.
இதையும் படியுங்க: ஆஹா.! இவ்ளோ அழகான பேயா…காஞ்சனா 4 -ல் நடிக்கும் பிரபல நடிகை..!
திருமணமான கீர்த்தி சுரேஷ் பேபி ஜான் படத்துக்கு தாலியுடன் கவர்ச்சி போஸ் கொடுத்து பிரோமோஷன் செய்தார். ஆனால் அட்லீக்கு இந்த படம் ₹100 கோடி வரை நஷ்டத்தை தந்துள்ளது.
இப்போது கீர்த்தி பாலிவுட்டில் ராசியில்லாத நடிகை என்ற பெயருக்கு ஆளாகியுள்ளார். போதாக்குறைக்கு கணவர் வீட்டிலும் ஒரே புகைச்சல்.