மீண்டும் கொரோனா; தனிமைப் படுத்திக்கொண்ட சூப்பர் ஸ்டார்; கலக்கத்தில் திரையுலகம்,…

Author: Sudha
13 July 2024, 1:58 pm

நேற்று நடைபெற்ற அம்பானி இல்ல திருமண விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். ஆனால் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் இந்த திரும்ப விழாவில் பங்கேற்கவில்லை. அம்பானி குடும்பத்தினர் நேரில் அழைத்தும் அக்ஷய் குமார் வராதது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.இதைக் குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்ஷய் குமார். தமிழில் வெளியான ‘சூரரைப் போற்று’ படத்தின் ஹிந்தி பதிப்பான ‘சர்பிரா’வில் சூர்யா நடித்த கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தை சுதா கொங்கராவே இயக்கி உள்ளார். சூர்யா தயாரித்துள்ளார்.நேற்று இந்த படம் வெளியானது.

இந்த படத்தின் புரமோசன் பணிகளில் கடந்த சில வாரங்களாக அக்ஷய்குமார் ஈடுபட்டு வந்தார்.

தற்போது அக்ஷய்குமாருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அக்ஷய் குமார் தன்னோடு புரமோஷன் பணிகளில் இணைந்து பணியாற்றியவர்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறார். கடந்த 2022ம் ஆண்டும் அக்ஷய் குமார் கொரோனாவால் பாதிக்கப் பட்டிருந்தார்.இப்போது இரண்டாவது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் அக்ஷய் குமார்.

  • kamal haasan ott streaming after 8 weeks கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?