சன்னி லியோன் நிகழ்ச்சி நடந்த இடத்தில் குண்டு வெடித்ததால் பரபரப்பு : ஷாக்கிங் சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2023, 5:16 pm

நடிகை சன்னி லியோன் ஆபாச படங்களை மூலமாக உலகம் முழுக்க பிரபலமானவர். தற்போது அவர் இந்திய சினிமாவில் மட்டும் தற்போது நடிகையாக இருந்து வருகிறார்.

தமிழில் அவர் நடித்த ஓ மை கோஸ்ட் படம் கடந்த வருட இறுதியில் ரிலீஸ் ஆனது . மேலும் சன்னி லியோன் ஹிந்தி, தெலுங்கு என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

சன்னி லியோன் நடிப்பது மட்டுமின்றி பல விதமான ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். அவர் நாளை ஞாயிற்றுக்கிழமை மணிப்பூரில் தலைநகர் இம்பாலில் நடக்கும் ஒரு பேஷன் ஷோவில் பங்கேற்க இருந்தார். அந்த ஷோ நடக்க இருந்த இடத்தில் இன்று குண்டு வெடித்திருக்கிறது.

குண்டு வெடித்ததில் உயிரிழப்பு எதுவும் இல்லை என தெரிவித்து இருக்கின்றனர். அந்த பகுதியில் போலீஸ் கமாண்டோ தற்போது தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருக்கிறது. எந்த நோக்கத்திற்காக குண்டு வைத்தனர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் நடிகை சன்னி லியோன் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில் படப்பிடிப்பின் போது தன்னுடைய காலில் அடிபட்டு விட்டது என்று குறிப்பிட்டு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

ஆனால், அந்த வீடியோவில் சன்னி லியோனை பார்த்த ரசிகர்கள் பலரும், அவர் அடிபட்டதை மறந்துவிட்டு, அவருடைய முகத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆம், அந்த அளவிற்கு ஆள் அடையாளமே தெரியாதது போல் மாறியுள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி