நானே கொன்னுட்டேன்?.. ஸ்ரீ தேவி மரணம் குறித்து 5 ஆண்டுக்கு பின் மவுனம் கலைத்த போனி கபூர்..!

Author: Vignesh
4 October 2023, 4:07 pm

நடிகை ஸ்ரீதேவி 80 காலகட்டத்தில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகை என்று கூறலாம். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி என மிகவும் பிஸியாக கலக்கி கொண்டிருந்தார். அப்போது இவர் சந்திக்காத கிசுகிசுக்களே கிடையாது என்று சொல்லலாம். நடிகை ஸ்ரீதேவி தென்னிந்திய படங்களை தாண்டி ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வந்தார் ஸ்ரீதேவி.

boney kapoor sridevi-updatenews360

இவர் 1996 -ம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு, இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதனிடையே, கடந்த 2018 -ம் ஆண்டு மர்மமான முறையில் ஸ்ரீதேவி இறந்துள்ளார். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது.

இவரது மரணம் குறித்து உண்மை இன்றுவரை மர்மமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளரும் போனி கபூர் முதல் முறை மனம்திறந்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் தன்னுடைய மனைவியை தானே கொன்று விட்டேன் என்று வாய் கூசாமல் நிறைய பேர் பேசினார்கள் என வருத்தப்பட்ட அவர், இது குறித்து பேச வேண்டாம் என்று இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்ததை குறிப்பிட்டு, இந்த கேள்வியை துபாய் போலீசாரும் சுமார் 48 மணி நேரம் என்னிடம் கேட்டார்கள்.

boney kapoor sridevi- updatenews360

அத்துடன் என்னிடம் உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தினார்கள் என கூறிய போனி கபூர், அப்போது என் மனம் பட்ட வேதனை எனக்கு மட்டுமே தெரியும் என்றும், அதன் ரிசல்ட் வந்த பின்னர் இது திட்டமிட்ட கொலை அல்ல என்றும், ஒரு எதிர்பாராத விபத்து என்று முடிவு செய்தனர். தனது உடம்பை எப்போதும் ஸ்லிம்மாக வைத்துக் கொள்ளும் மனநிலையில், பல நாட்கள் உணவு உண்ணாவதை ஸ்ரீதேவி தவிர்த்து விடுவார்.

boney kapoor sridevi- updatenews360

பல வேலைகளில் உணவு உண்பதை தவிர்த்து வந்தது தான் ஸ்ரீதேவி மயங்கி விழுந்து அவரது இறப்பிற்கு அதுவே காரணமாகிறது. மேலும் ஸ்ரீதேவிக்கு Low பிபி இருந்தது மருத்துவங்கள் சொன்ன எந்த ஆலோசனைகளையும் அவர் மதிக்கவில்லை என அந்த பேட்டியில் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

boney kapoor sridevi- updatenews360
  • chiyaan vikram new movie title is maaveeran movie dialogue மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?