என் மனைவிக்கு அடுத்து அந்த நடிகையிடம் அதை பார்த்தேன்.. மனம் திறந்த போனி கபூர்..!
Author: Vignesh2 June 2023, 2:46 pm
கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

இவர் நடித்த அண்ணாத்த, மோகன்லால் அவர்களுடன் நடித்த மரக்காயர் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்தார், இந்த படத்துக்காக கூட இவர் மீண்டும் தேசிய விருது பெறுவார் என எதிர்பார்க்க படுகிறது. பின் தெலுங்கில் இவர் மகேஷ் பாபுவுடன் நடித்த சர்காரு வாரி பட்டா என்னும் படம் Release ஆகி பட்டையை கிளப்பி விட்டது.

முதலில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், கடந்த சில நாட்களாக கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பியுள்ளார். இதனால், கவர்ச்சி புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வரும் அவர், சினிமாவிலும் கவர்ச்சியை காண்பிக்க ஆரம்பித்துள்ளார்.
தற்போது உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். இந்த படம் இந்த மாதம் வெளியாக உள்ளது.
இதனிடையே, சமீபத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர், கீர்த்தி சுரேஷ் குறித்து பேசி உள்ளார். அதில் போனி கபூர், தான் பார்த்ததிலேயே தன் மனைவிக்கு அடுத்து கீர்த்தி சுரேஷ் தான் மிகவும் அழகாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.