ஒரே நாளில் போஸ் வெங்கட் குடும்பத்தில் இரு முக்கிய நபர்கள் காலமானார்கள் – இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்..!
Author: Vignesh24 ஜூன் 2023, 10:30 காலை
தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருபவர் நடிகர் போஸ் வெங்கட். இவர் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் அதிகப்படியாக நடித்து இருக்கிறார். இவர் கொடுத்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார். இவரது மனைவி சோனியாவும் சின்னத்திரை நடிகை தான்.
இந்தநிலையில், ஒரே நாளில் நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரரும், சகோதரியும் மரணமடைந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரது சகோதரி வளர்மதி மரடைப்பு காரணமாக இன்று சென்னையில் காலமானார்.
இவரது இல்லம் சென்னை எம்எம்கே பகுதியில் உள்ளது. இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக போஸ் வெங்கட்டின் சகோதரரான ரங்கநாதன் சென்னை வந்துள்ளார். இந்த நிலையில், இறுதிச் சடங்கில் பங்கேற்ற ரங்கநாதன் தன்னுடைய சகோதரியை பார்த்து கதறி அழுதுள்ளார்.
அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சகோதரியின் உடல் மீதே அவரும் விழுந்து மரணம் அடைந்தார். இவர்களது இறுதி ஊர்வலம் அறந்தாங்கியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திரை உலகினரிடையே, பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆழ்ந்த இரங்கலை இவர்களுக்கு அனைவரும் தெரிவித்து வருகிறார்கள்.
0
0