“நயன்தாரா கூட படம் பாக்கலாம்னு கூப்பிட்டு, தூரபோனு சொல்லி அசிங்கப்படுத்திட்டாங்க”… வருதத்தில் ஜிபி முத்து..!

Author: Vignesh
22 December 2022, 10:15 am

டிக் டாக் மூலம் பிரபலங்களில் மிக முக்கியமானவர் ஜி பி முத்து. உடன்குடியைச் சேர்ந்த மரப்பொருள் விற்பனையாளரான அவர் அது தடை செய்யப்பட்ட பிறகு யூட்யூப் மற்றும் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.

மேலும் தனக்கு வரும் கடிதங்களை படித்து காட்டிய வீடியோக்கள் பூடியூப்களில் அமோக வரவேற்பு கிடைத்ததோடு சப்ஸ்க்ரைபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இன்ஸ்டாகிராமிலும் தனது வீடியோக்களை பதிவிட்ட அவர் மக்களிடையே பிரபலமாக தொடங்கினார். இதையடுத்து கடை திறப்பு விழாக்கள், பள்ளி கல்லூரி நிகழ்ச்சிகள் பங்கேற்று பிஸியாக வலம் வர ஆரம்பித்தார்.

மீம் கிரியேட்டர்களும் ஆதரவு கொடுக்க தமிழகம் முழுவதும் பிரபலமானா ஜி.பி.முத்துவுக்கு ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது .

இதையடுத்து அதிர்ஷ்டமும் அவர் வீட்டுக்கே தேடிப் போனது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஜி பி முத்து.

பிக் பாஸ் வீட்டில் நுழைந்த உடனே ஆதாம் னா யாரு என கமல்ஹாசனையே மலைக்க வைத்தார் ஜிபி முத்து. சிறுது நாட்களில் மகனுக்கு உடல்நிலை சரியில்லை என கூறி வீட்டில் இருந்து வெளியேறினார்.

அது மட்டுமல்ல.. சன்னி லியோனோடு ஜிபி முத்து நடித்த ஓ மை கோஸ்ட் பட நிகழ்ச்சியில் பங்கேற்று.. ரசிகர்களின் ஆதரவுகளை சம்பாதித்தார். தொடர்ந்து ரசிகர்கள் பட்டாளம் அவருக்கு நீண்டு கொண்டே போகிறது.

தற்போது இன்று திரையரங்குகளில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில், உருவாகியுள்ள கனெக்ட்’ படம், வெளியாகவுள்ளது. சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் என பலர் நடித்துள்ள ‘கனெக்ட்’ படம், 99 நிமிடங்கள் ஓடும் எனவும், இப்படத்துக்கு இடைவெளி இல்லை என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

nayanthara - updatenews360.jpg 2

கனெக்ட் திரைப்படம் தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படத்தின் ஸ்பெஷல் ஷோ திரையிடப்பட்டது. அதில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஜிபி முத்துவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இதை ஏற்று அங்கு சென்ற ஜிபி முத்துவை சிலர் தரக்குறைவாக பேசியதால் படம் பார்க்காமல் பாதியிலேயே ஜிபி முத்து வெளியே சென்றதாக கூறப்பட்டது. சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுகுறித்து ஜிபி முத்துவிடம் கேட்கப்பட்டதற்கு விளக்கமளித்த ஜிபி முத்து, “கனெக்ட் படத்தின் ஈவண்ட் நடத்தியவர்கள் என்னிடம் சொன்ன விதம் வேற, ஆனா அங்கு நடத்துன விதம் வேற.

nayanthara- updatenews360.jpg 2

நயன்தாரா கூட உட்கார்ந்து படம் பார்க்கலாம் வாங்கனு கூப்பிட்டாங்க. ஆனா அங்கு கூப்பிட்டு போய் ஏதோ ஒரு ஓரமா உட்கார வச்சாங்க. எனக்கு ஒருமாதிரி ஆகிடுச்சு. அதனால படம் பார்க்காமலேயே வெளிய வந்துட்டேன்.

இதெல்லாம் நயன்தாராவுக்கு தெரியாது. நயன்தாராவேட பவுன்சர்கள் என்னை ரொம்ப தரக்குறைவா பேசினாங்க. தூரபோனு சொல்லிட்டாங்க. இதனால் நான் அங்கிருந்து கிளம்பி வந்துட்டேன்.

gp muthu 1 - updatenews360

அதுக்கு அப்பறம் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் என்னை போனில் அழைத்தார். பாதி தூரம் வந்துட்டேன், இன்னொரு முறை சந்திக்கலாம்னு சொல்லிட்டேன்” என ஜிபி முத்து மனவருத்தத்துடன் பேசினார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 531

    0

    0