சந்திரமுகி 2 Audio Launch’ல் அஜித் ரசிகர் செய்த காரியம்… கல்லூரி வளாகத்தில் பரபரப்பு!

Author: Shree
26 August 2023, 3:13 pm

பொதுவாகவே அஜித் விஜய் ரசிகர்கள் எப்போதும் எலியும் பூனையுமாக மாறி மாறி சண்டைபோட்டுகொள்ளவது பல வருடங்களாக பார்த்து வருகிறோம். ஆனால், சமீப நாட்களாக விஜய் ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்காக ரஜினி ரசிகர்களுடன் சண்டைபோட்டு வருகிறார்கள். ஆகவே இப்போது அஜித் தனிப்பட்ட ரசிகர்கள் கொண்ட ஹீரோவாக விலகி சென்றுவிட்டார்.

ஆனால், மற்ற நடிகர்களின் திரைப்பட விழாக்களில் கலந்துக்கொள்ளும் அஜித் ரசிகர்கள் அங்கும் சென்று அஜித்தை பற்றியே புகழ்ந்து பேசி ஆரவாரம் செய்து நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்துக்கொள்கிறார்கள். அப்படித்தான் நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் சந்திரமுகி 2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் லைக்கா நிறுவனத்தின் ஓனர் சுபாஸ்கரனிடம் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் அப்டேட் கேட்டு கத்தி கூச்சலிட்டார் அஜித் ரசிகர் ஒருவர். அதற்கு பதில் அளித்த சுபாஸ்கரன் “விரைவில் விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கவுள்ளோம் என கூறினார்” உடனே அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

இதனிடையே பவுன்சர்களின் கட்டுப்பாட்டை மீறி தண்ணீர் குடிக்கப்போவதாக மேடை அருகே செல்ல முயன்ற மாணவர் ஒருவரை பவுன்சர் தாக்கி தர்ம அடி கொடுத்தனர். பவுன்சர்களிடம் குத்து வாங்கிய அந்த மாணவர் தனது நண்பர்கள் கூட்டத்தை அழைத்து வந்து பவுசர்களை அடிக்க சொல்லியுள்ளார். நண்பர்களையும் சேர்த்து குமுறி கூர் கட்டிவிட்டார்கள் பவுன்சர்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ