நைட் டைம்ல கூப்பிட்டு ரொம்ப மோசமா நடந்துக்கிட்டான்.. சீரியல் நடிகை ஜெயலட்சுமி கதறல்..!

Author: Vignesh
7 February 2024, 2:20 pm

தமிழ் சினிமாவில் பெண்கள் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் மட்டும் தான் படவாய்ப்பு என்ற விதி காலம் காலமாக இருந்து வருகிறது. இதில் குறிப்பாக ஹீரோயின்களுக்கு வாய்ப்பு வேண்டும் என்றால் முன்னரே தயாரிப்பாளர், இயக்குனர், கேமரா மேன், ஹீரோ என பல பேரும் அட்ஜெஸ்ட்மென்ட் செய்யவேண்டும்.

அப்படி தடையில்லாமல் கேட்பவர்களையெல்லாம் சந்தோஷப்படுத்தும் பெண்கள் வெகு சீக்கிரத்தில் டாப் ஹீரோயின்கள் ஆகிவிடுவார்கள் என பேசப்பட்டு வருகிறது. சினிமாவில் வாய்ப்புகள் தேவை என்றால் நடிகைகளை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொல்வது வாடிக்கையான விசயமாகிவிட்டது.

இது போன்ற விஷயங்களில் வெகு சில நடிகைகள் தான் தப்பிப்பார்கள். சில நடிகைகள் நேரடியாகவே ஹீரோக்களுடன் நெருக்கமாக பழகி அவர்கள் எதிர்பார்ப்பதை விட அதிகம் திருப்தி படுத்துவார்கள். காரணம், ஹீரோக்களுடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் இயக்குனர், தயாரிப்பாளர், கேமரா மேன் என யாரும் கிட்டவே நெருங்கமுடியாது.

jayalakshmi

அந்த வகையில், சமீபத்தில் சின்னத்திரையில் பல சீரியல்களில் வில்லியாக நடித்து பிரபலமானவர்தான் ஜெயலட்சுமி. இவர் வேட்டைக்காரன், கோப்பேரி பாளையம், முத்துக்கு முத்தாக, விசாரணை, குற்றம், நோட்டா போன்ற திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

jayalakshmi

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஜெயலட்சுமி மற்ற துறையை போல சினிமாவில் பெண்களுக்கு பிரச்சனை இருக்கிறது. ஒரு பிரச்சனை நடக்கும் போது, அமைதியாக இருந்துவிட்டு அதன் பின்னர் இயக்குனர் அல்லது நடிகர்கள் குறித்து பேசுவது சரியாக இருக்காது. உங்களிடம் யாராவது தவறாக நடந்து கொள்கிறார் என்றால், உடனே அது தவறான விஷயம் என்று சொல்லுங்கள். அப்போதுதான் அவர் அடுத்தவர்களிடம் அந்த தவறை செய்ய மாட்டார்.

jayalakshmi

மேலும், பேசுகையில், நள்ளிரவில் எனக்கு ஒரு நம்பரில் இருந்து கால் வந்தது. அவன் ரொம்ப மோசமாக பேசினான். பெண்களிடம் எப்படி எல்லாம் பேசக்கூடாதோ அப்படி எல்லாம் என்னிடம் பேசினான். அப்போது, நான் அவனிடம் நேர்ல வாடா.. போன்ல பேசக்கூடிய அளவுக்கு தான் உனக்கு தைரியம் இருக்கு, நீ கூப்பிட்டு இருக்கிற நம்பரை வைச்சு உன்னை கண்டுபிடிக்கிறேன் என போலீசில் புகார் கொடுப்பேன் என்று கூறினேன். அதற்கு அவன் காவல்துறையால் என்னை கண்டுபிடிக்கவே முடியாது என தெரிவித்தான். இது தொடர்பாக, போலீஸ் புகார் அளித்த பிறகு அந்த நபர் என்னை மீண்டும் அழைத்து மிரட்டினான் என்று ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

jayalakshmi

முன்னதாக, பாடலாசிரிய சினேகன் “சினேகம் பவுண்டேஷன்” என்ற தனது அறக்கட்டளை பெயரில் நடிகை ஜெயலட்சுமி இணையதளம் மற்றும் சமூக வலைதள கணக்குகள் தொடங்கி பொதுமக்களிடம் பணம் வாங்கி வருவதாகவும், இதனால் தனக்கும் தன்னுடைய அறக்கட்டளைக்கும் களங்கம் ஏற்படுத்தி இருந்ததாக புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!