சினிமாவில் இருந்து BREAK? அஜித் எடுத்த அதிரடி முடிவு : வெளியான அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
6 March 2023, 8:22 pm

நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வந்த திரைப்படம் துணிவு. வங்கிகள் செய்யும் மோசடிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருந்த இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. வசூலையும் வாரி குவித்தது.

இந்தப்படத்தை தொடர்ந்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும், அதனை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ஆனால் விக்னேஷ் சிவன் அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் அவருக்கு பதிலாக இயக்குநர் மகிழ்திருமேனியே அந்தப்படத்தை இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

துணிவு படத்தின் படப்பிடிப்பு சமயத்தில்தான் நடிகர் அஜித் உலகம் முழுக்க மோட்டாரில் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்ற தன்னுடைய கனவு திட்டத்தை கையில் எடுத்தார்.

முதற்கட்டமாக ஐரோப்பிய நாடுகளில் மோட்டார் சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், அதன் பின்னர் இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பைக்கில் சென்று வந்தார்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்துமே சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்கள் மட்டுமல்லாமல் சாமானிய மக்களிடம் வரவேற்பை பெற்றது.

இதனிடையே தன்னுடைய 62 ஆவது படத்தை முடித்துக்கொடுத்த உடன் நடிகர் அஜித் நடிப்பிற்கு ஒரு வருடம் இடைவெளி விட்டு பைக்கிலேயே உலகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது.

அஜித் நடிக்கும் அடுத்தப்படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளார் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும், இசையமைப்பாளராக அனிருத் கமிட் ஆகி இருப்பதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?