பெற்றோருடன் மனமுறிவு.. தற்போது மனைவியுடன் பிரிவா? நடிகர் விஜய்க்கு என்னதான் ஆச்சு?

Author: Udayachandran RadhaKrishnan
2 January 2023, 2:02 pm

விஜய் தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் வாரிசு. பீஸ்ட் பட படப்பிடிப்பின் போதே இப்படத்திற்கான அறிவிப்பு வந்துவிட்டது, படம் முழுவதும் தயாராகி வரும் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது.

அண்மையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது, நேற்று சன் தொலைக்காட்சியில் முதன்முறையாக ஒளிபரப்பும் ஆனது.

விஜய்யின் எந்த பட நிகழ்ச்சி என்றாலும் அவரது மனைவி சங்கீதா கலந்துகொள்வார். பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சி என்றாலும் கலந்துகொள்வார். ஆனால் அட்லீ-ப்ரியாவின் சீமந்தம், வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாக்களுக்கு சங்கீதா அவர்கள் வரவில்லை.

இதனால் பல செய்திகள் சமூக வலைதளங்களில் உலா வந்தன. அவர் வராததற்கு முக்கிய காரணம் அவர்களின் மகன் மற்றும் மகள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்களுடன் சங்கீதா அங்கு இருப்பதால் நிகழ்ச்சிகளுக்கு வர முடியவில்லை என கூறப்படுகிறது.

ஆனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு, பிரிந்து வாழ்வதாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. நெகட்டிவ் விமர்சனங்கள் வரத்தான் செய்யும் ஆனால் அதை கண்டுக்காமல் நாம் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என விஜய் சொன்ன வசனத்தை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?