டிரஸ் இல்லாம அந்த இடத்துல இருந்தேன்.. நிர்வாணமாக நடித்தது குறித்து உண்மையை உடைத்த பிரபல நடிகை..!
Author: Vignesh4 November 2023, 4:31 pm
யூடியூப்பில் ஒளிபரப்பாகி வந்த வெப் சீரிஸ் ஆஹா கல்யாணம், டிவியில வரும் மெகா சீரியல்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு வைரலாகியுள்ளது இந்த தொடர்.
இந்த தொடரில் பவி டீச்சராக நடித்து வரும் பிரிகிடா தான் இணையத்தின் சென்சேஷன். பிரேமம் மலர் டீச்சர்க்கு அப்புறம் அதிகமான ஃபேன்ஸ் இருப்பது பவி டீச்சர்க்கு தான். இப்படி ஒரு அத்தை மகள் நமக்கு இல்லையே என இளைஞர்கள் வருத்தப்பட்டு வருகிறார்கள்.
பவியின் ஒவ்வொரு அசைவையும் நம்ம மீமர்கள், மீம்ஸாக்கி கலக்கியது. குறிப்பாக 90ஸ் கிட்ஸ் மீம்ஸ்களில் அதிகமாக இடம்பெறுவது பவி டீச்சர் தான். மேலும், சேரி பற்றி அவர் பேசிய சர்ச்சை பேச்சு உலகளவில் Famous.
மாஸ்டர் படத்தில் கூட முக்கிய கேரக்டரில் பிரிகிடா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், ரியாலிட்டி என்னவென்று எல்லோருக்கும் படம் ரிலீசான பிறகு தெரிந்து விட்டது. அதன் பின் முகேன் ராவ் நடித்த வேலன் படத்தில் நடித்தார். அதன் பின் இரவின் நிழல் படத்தில் கதாநாயகியாகி + உதவி இயக்குனராக பணி புரிந்தார். மேலும், இணையத்தில் பல நடிகைகள் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் ரவின் நிழல் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். அப்போது, தான் இறுதி ஆண்டில் படித்து வந்ததாகவும், பார்த்திபன் சாரிடம் இன்டர்ன்ஷிப் செய்வதற்காக துணை இயக்குனராக ஒப்பந்தம் ஆகினேன்.
உண்மையில், இரவின் நிழல் படத்தில் தான் நடித்த கதாபாத்திரத்தின் ஆடிஷனில் நான் கலந்து கொள்ளவில்லை. மாறாக அந்த ஆடிசனை கவனிக்கும் மேற்பார்வையாளராக இருந்தேன். நிறைய பேரை ஆடிஷன் செய்தோம். ஆனால், இறுதியாக இந்த கதாபாத்திரத்தை நீயே செய்து விடு என்று பார்த்திபன் சார் கூறினார். இந்த வாய்ப்பை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
ஒரு சிங்கிள் டேக் படத்தில் இப்படியான காட்சிகள் நிறைந்த படத்தில் எப்படி நடிக்க போகிறோம் என்ற பயம் எனக்குள் இருந்தது. ஆனாலும், ஒப்புக்கொண்டு நடித்தேன். மேலும், ஆடையின்றி அமர்ந்திருந்த போது எனக்குள் ஒரு பயம் ஏற்பட்டது. இந்த காட்சி எப்படி வருமோ என்ற ஒரு உறுத்தல் இருந்தது. படம் வெளியான பின்னர் எண்ணை பார்க்கும் பொழுது ரசிகர்களுக்கு ஒரு வித பரிதாப உணர்வும் இப்படி ஒரு பெண்ணுக்கு ஒரு கொடுமை நடக்கிறது என்ற உணர்வு தான் எழுந்ததே தவிர தவறான எண்ணங்களோ அல்லது கவர்ச்சியாக நடித்திருக்கிறேன் என்ற ஒரு எண்ணம் கூட எழவில்லை என்று பிரகிடா சாகா தெரிவித்துள்ளார்.