புஸ்ஸி ஆனந்த் கவலைக்கிடம்? நள்ளிரவில் பதறியடித்து மருத்துவமனைக்கு ஓடிய விஜய்!
Author: Shree3 November 2023, 1:22 pm
சினிமாவில் என்னதான் பெரிய ஹீரோவாக இருந்தாலும் விமர்சனங்கள், சர்ச்சைகள், கேலி , கிண்டல் என பல சிக்கல் வரும் அதையெல்லாம் தாண்டி தொடர்ந்து மக்களுக்கு தான் நல்லவர் என்பதை படத்தின் மூலமாகவும், நேரடியாகவும் நிரூபித்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்படி செய்தால் தான் இந்த துறையில் நிலைத்து இருக்கமுடியும்.
அப்படிதான் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவான விஜய் என்ன பெரிய சிக்கல்கள், பிரச்சனைகள் வந்தாலும் அதையெல்லாம் கண்டும் காணாமல் தொடர்ந்து நடிப்பில் கவனத்தை செலுத்தி மக்களை கவர்ந்து வருகிறார். தற்போது அரசியலில் இறங்கியுள்ளார். அவர் கடைசியாக லியோ திரைப்படத்தில் நடித்து நடித்தார்.
விஜய் அரசியல், திரைத்துறை மற்றும் சொந்த வாழ்க்கை என அவர் எடுக்கும் அத்தனை முக்கிய முடிவுகளுக்கும் சாவியாக இருப்பது விஜய்யின் மேனேஜர் ஆன புஸ்ஸி ஆனந்த் தான். விஜய்யின் நம்பிக்கைக்குரிய நபராகவும், விஜய்யின் நிழலாகவும் இருந்து செயல்பட்டு வரும் புஸ்ஸி ஆனந்த் தான் விஜய்யின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணமாகவும் பார்க்கப்படுகிறார். விஜய் எடுக்கும் முக்கிய முடிவுகள் புஸ்லியின் அறிவுரையின் படியே நடந்துவ வருகிறது.
நேற்றுமுன்தினம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‘லியோ’ படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இவ்விழாவை பொறுப்புடன் மிகச்சிறப்பாக நடத்திக்கொடுத்த புஸ்ஸி ஆனந்த்திற்கு வேலை பளு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையிலன் நேற்றிரவு அனுமதிப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை அறிந்ததும் படபடத்துப்போன விஜய் நள்ளிரவே மருத்துவமனைக்கு புஸ்ஸி ஆனந்த்திடம் நலன் விசாரித்துள்ளார் விஜய். இச்சம்பவம் விஜய் ரசிகர்களிடையே சற்று பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.