‘வேற ஹீரோவே கிடைக்கலயா’.. விஜயகாந்த் நிறத்தை பற்றி கேவலமாக பேசிய பிரபல நடிகை!!

Author: Udayachandran RadhaKrishnan
16 February 2023, 4:16 pm

தமிழ் சினிமாவில் தனக்கான தனி பாணியை உருவாக்கி வெற்றி கோட்டையை அமைத்தவர் நடிகர் விஜயகாந்த். முன்னணி நடிகரகாக குறுகிய காலத்தில் முத்திரை பதித்து, அரசியலிலும் சாதனை படைத்தார்.

பல வெற்றிகளை கொடுத்த முன்னணி நடிகராக உயர்ந்த விஜயகாந்த் தயாரிப்பாளராகவும், விருதுகிரி என்ற படம் மூலம் இயக்குநராகவும் இருந்தார்.

தான் நடிகராக இருந்த காலக்கட்டத்தில் அரசியலில் இருந்த போதும் ஏராளமான உதவிகளை செய்துள்ள விஜயகாந்த், படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் சமமான உணவு வழங்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வந்தவர்.

இந்த நிலையில் பிரபல நடிகை வடிவுக்கரசி அன்னை என் தெய்வம் என்ற படத்தை தயாரித்தார். அந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய அவர், அந்த படத்தில் நடிக்க ஒரு சில நாயகர்களை அணுகினோம். ஆனால் யாரும் அமையாத போது நடிகர் விஜயகாந்த் நினைவுக்கு வந்தார்,

அவரிடம் கதையை சொன்ன போது ஓகே சொல்ல, நாயகியாக நடிக்க வைக்க ராதிகாவிடம் பேசினோம், அதற்கு அந்த கருப்பனுடன் யார் நடிப்பா, உங்களுக்கு வேற ஹீரோவே கிடைக்கலயா என கேவலமாக பேசி மறுத்துவிட்டார்.

பின்னர் நடிகை ஜீவிதாவிடம் பேசினோம். அவரும் ஒத்துவராததால் நடிகை மாதுரியை நடிக்க வைத்தோம். அந்த படத்தில் நடிகை லட்சுமியை அம்மாவாக நடிக்க வைக்க பேசினோம்,. அவர் ஒத்துக் கொள்ளாததால் கேஆர் விஜயா அவர்களை நடிக்க வைத்தோம் என கூறினார்.

நடிகை ராதிகா முதலில் விஜயகாந்த்தின் நிறம் வைத்து கேவலமாக பேசியிருந்தார். பின்னர் வரிசையாக விஜயகாந்த்துடன் படத்தில் நடித்து காதலில் விழுந்த சம்பவமும் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1025

    12

    2