தியேட்டர் கிடைக்காத காரணத்தால் தள்ளிப்போகும் கங்குவா? தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்கும் சூர்யா!

Author: Udayachandran RadhaKrishnan
6 September 2024, 3:59 pm

நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கங்குவா. ஞானவேல் ராஜா தயாரிப்பில் பெரும்பொருட் செலவில் உருவாக்கப்பட்டது.

எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு வெளியாகும் கங்குவா திரைப்படம், வரும் அக்டோபர் 10ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் ரஜினியின் வேட்டையன் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால், ரஜினியுடன் கங்குவா படம் மோதாது என தெரிவித்த சூர்யா, ரிலீஸ் தள்ளிப்போகிறது என அறிவித்தார்.

Kanguva Movie

ஆனால் எப்போது ரிலீஸ் என்ற தேதி அறிவிக்காததால் சூர்யா ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். இந்த நிலையில் தீபாவளிக்கு படம் நிச்சயம் ரிலீசாகும் என கூறி வந்தனர்.

ஆனால் தீபாவளிக்கும் படம் வெளியாகும் சாத்தியம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால், Bloody Beggar, அமரன், பிரதர் போன்ற படங்கள் வெளியாக உள்ளதால் அதிக திரையரங்குகள் கிடைக்காத காரணத்தால் கங்குவதா தள்ளிப்போகும் வாய்ப்புகள் அதிகம் என சொல்லப்படுகிறது.

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்