தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது. ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் , பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகியது.
ஏற்கனவே இப்படத்தில் இருந்து இரண்டு லிரிக்கல் பாடல்கள் வெளியாகிது. தொடர்ந்து இப்படத்தை குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. பின்னர் தனுஷின் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பினை பல மடங்கு அதிகரித்தது.
குறிப்பாக தனுஷின் வெறித்தனமான நடிப்பு மிரட்டி எடுக்கிறது. ட்ரைலரில், நீ யாரு உனக்கு என்ன வேண்டும் என்பதை பொறுத்து நான் யார் என்பது மாறும்” என தனுஷ் பேசும் டயலாக் தேறி மாஸாக இருந்தது. அந்த ட்ரைலர் நம்பர் ஒன் ட்ரண்ட் ஆனதை தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தின் “கொம்பரி வேட்டபுலி” என்ற ரொமான்டிக் லிரிகள் பாடல் வீடியோ யூடியூபில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் நாளை மறுநாள் வெளியாகப்போகும் இப்படத்திற்கு வித்யாசமான ப்ரோமோஷன் செய்துள்ளது படக்குழு. பாலைவனத்தில் அதிவேகமாக ஜீப்புகளை ஓட்டிச்சென்று கேப்டன் மில்லர் போஸ்டர் கொடிகளை அசைத்து வித்தியாசமாய் ப்ரோமோஷன் செய்துள்ளனர். இதன் வீடியோவை யூடியூபில் வெளியிட அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.