இந்தியா விடுதலை ஆகும் முன்னர்: தனுஷின் தரமான சம்பவம் – கேப்டன் மில்லர் ” திரைவிமர்சனம்”
Author: Rajesh11 January 2024, 7:41 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது. ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் , பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகியது.
ஏற்கனவே இப்படத்தில் இருந்து இரண்டு லிரிக்கல் பாடல்கள் வெளியாகிது. தொடர்ந்து இப்படத்தை குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. பின்னர் தனுஷின் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பினை பல மடங்கு அதிகரித்தது.
குறிப்பாக தனுஷின் வெறித்தனமான நடிப்பு மிரட்டி எடுக்கிறது. ட்ரைலரில், நீ யாரு உனக்கு என்ன வேண்டும் என்பதை பொறுத்து நான் யார் என்பது மாறும்” என தனுஷ் பேசும் டயலாக் தேறி மாஸாக இருந்தது. அந்த ட்ரைலர் நம்பர் ஒன் ட்ரண்ட் ஆனதை தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தின் “கொம்பரி வேட்டபுலி” என்ற ரொமான்டிக் லிரிகள் பாடல் வீடியோ யூடியூபில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் நாளை வெளியாகப்போகும்இப்படத்தின் முதல் திரைவிமர்சனம் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. பீரியட் ஜானர் படமாக உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் இந்தியா விடுதலை ஆகும் முன்னர் பிரிட்டிஷ் மற்றும் இந்தியர்களுக்கு நடந்த போர் குறித்து படத்தின் கதை அமைந்துள்ளது.
இப்படத்தின் மூன்று கெட்டப்புகளில் நடித்துள்ள தனுஷ் பிரிட்டிஷ் ராணுவத்தில் வேலை பார்க்கும் கேப்டன் மில்லர் கெட்டப்பில் ரொம்பவே இளமையாக நடித்து மாஸ் காட்டியுள்ளார் மேலும் இன்னும் இரண்டு கெட்டப்கள் ஆக்ஷனில் தெறிக்கும் என கூறப்படுகிறது. பிரிட்டிஷ் ராணுவத்தில் சேருவதையே தனது லட்சியமாக கொண்டுள்ள தனுஷ், அதில் சேர்ந்த பின்னர் அவரது வாழ்வில் நடக்கும் மாற்றங்கள் தான் “கேப்டன் மில்லர்” படத்தின் கதை.
பிரிட்டிஷ் ராணுவம் இந்திய மக்களை சித்ரவதை செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாமல் உள்ளூர் மக்களுக்காக புரட்சியில் களமிறங்கும் தனுஷ் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார்.கடைசி 30 நிமிடங்கள் முழுக்க முழுக்க ஆக்ஷனில் தெறிக்கவிட்டுள்ளதாம். இதுவரை பார்த்திராத தனுஷை இந்த படத்தில் நிச்சயம் பார்க்கலாம் ஜிவி பிரகாஷின் பின்னணி இசையும் படத்துக்கு பெரிய பலம். நடிகை பிரியங்கா மோகனின் கதை மிகவும் போல்டாக உள்ளதாம்.. ஆக மொத்தம் இப்படத்தின் வசூலில் தெறிக்கும்… பாக்ஸ் ஆபீசில் ரெகார்ட் பதிக்கும் என்கிறார்கள்.