பிக்பாஸ் பிரபலம் ஷெரீனாவுக்கு பாலியல் தொல்லை.. அத்துமீறி நடந்து கொண்ட டிரைவர் அதிரடி கைது..!
Author: Vignesh8 February 2024, 7:12 pm
விஜய் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷெரீனா. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு சமுத்திரக்கனி இயக்கிய வினோதய சித்தம் படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை ஷெரினின் அண்ணன் கௌரி குருபரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், தொடர்ச்சியாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து பாலியல் ரீதியாகவும், ஆபாசமாகவும் பேசி தொல்லை கொடுத்து வருவதாக கூறியிருந்தார். அந்த நபர் யார் என்று விசாரித்த போது அவர் செரீனாவின் கார் ஓட்டுநர் என்றும், முன்பு கார் ஓட்டுநராக இருந்து வந்த கார்த்திக் என தெரியவந்துள்ளது. இதைப்பற்றி, அவரிடம் கேட்டபோது நண்பர்களுடன் சேர்ந்து வீட்டிற்க்கே வந்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். அதன் பின்னர் விசாரணையில் கார்த்திக்கும் அவரது நண்பர் இளையராஜாவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.