கார், தங்க காசு, நிலம்… ‘விடுதலை’ டீமுக்கு சொத்தையே எழுதி கொடுத்த தயாரிப்பாளர்?
Author: Shree11 April 2023, 9:02 pm
தமிழ் சினிமாவின் முத்தான இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘விடுதலை-1’. எழுத்தாளர் திரு. ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற நாவல் கதையினை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் மக்களுக்காக ஒரு தனி படை அமைத்து அரசாங்கத்தை எதிர்த்து போராடும் ஒரு போராளியின் கதை.
இதில் கான்ஸ்டேபிளாக நடித்த சூரியின் நடிப்பு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் ஆச்சர்யப்படவைத்தது. சூரி தான் சந்திக்கும் இன்னல்கள் & அவமானங்களை கடந்து எப்படி சாதிக்கிறார் என்பதை கூறும் இப்படத்தை கதை பலருக்கும் பிடித்துவிட்டது. படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது.
சுமார் 4 ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வந்த இப்படம் இன்று எதிர்பாராத சாதனை படைத்திருப்பது பார்த்து மெய்சிலிர்த்த படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அண்மையில் நடைபெற்ற இப்படத்தில் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சியில் மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் விலை உயர்ந்த பரிசை வழங்கி இருக்கிறார்.அத்துடன் அவர்களுக்கு ஒரு பவுன் தங்க காசு வழங்கி கௌரவித்திருக்கிறார்.

இது அப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக அமைந்தது. இதே போன்று இப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறனையும் தன்னுடன் சேர்ந்து கடினமாக உழைத்த உதவி இயக்குனர்களுக்கு ஆளுக்கு இரண்டு கிரவுண்ட் இடம் வாங்கி கொடுத்தார். தற்போது தயாரிப்பாளரும் தன் பங்கிற்கு கிட்டத்தட்ட படத்தின் லாபத்தில் கிடைத்த பணத்தை மிகப்பெரிய பரிசுகள் வழங்கி இப்படி கௌரவித்திருப்பது பெருமைக்குரியதாக பார்க்கப்படுகிறது.