வரேன்னு சொல்லிட்டு ஏன் வரல? ஆசை காட்டி ஏமாற்றிய சன்னி லியோன் மீது வழக்கு!
Author: Shree16 March 2023, 11:36 am
ஆபாச நடிகையான சன்னி லியோன் 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் முதன் முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார். அதற்கு முன்னர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் , இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் சன்னி லியோனுக்கு உலகம் முழுக்க பலகோடி ரசிகர்கள் உள்ளனர். அப்படிதான் கேரளாவில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சன்னி லியோன் அவ்வப்போது கேரள ரசிகர்களை பொது நிகழ்ச்சியில் சந்திப்பார். அண்மையில் கூட துல்கர் சல்மானின் ஒரு படத்தில் நடனமாடியிருந்தார். இந்நிலையில் கேரளாவில் நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்பதற்காக சன்னி லியோன் அழைக்கப்பட்டிருக்கிறார்.
ஆனால், அவர் கடைசி நேரத்தில் போகவில்லை. இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நடிகை சன்னி லியோன் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி போதிய ஆதாரம் இல்லாததால் தள்ளுபடி செய்து விட்டாராம்.