வித் அட்ஜஸ்ட்மென்ட், வித் அவுட் அட்ஜஸ்ட்மென்ட்.. பகிர் கிளப்பும் இயக்குனர்..!

Author: Vignesh
5 August 2023, 4:41 pm

அட்ஜஸ்ட்மென்ட் என்பது தமிழ் சினிமாவில் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மிகப் பெரிய ஒரு சவாலாக இருந்து வருகிறது. அதை தாண்டி எத்தனையோ ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்கள், துணை நடிகைகள் தங்கள் நினைத்த லட்சியத்தை அடைந்து இருக்கிறார்கள்.

பெரும்பாலும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என அவர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்தால் மட்டுமே ஒரு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் தான் இன்றைய தமிழ் சினிமா இருந்து வருகிறது. இந்த நிலை சினிமாவில் மட்டும் இல்லாமல் அனைத்து துணைகளிலும் துறைகளிலும் இந்த பிரச்சனை நடந்து கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற கேஸ்டிங் இயக்குனர்கள் சினிமாவின் மறுபக்கத்தை புட்டு புட்டு வைத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியதாவது தற்போது சினிமாவில் நடிக்க வரும் பெண்கள் அவர்களின் பயோவில் கூட வித் அட்ஜஸ்ட்மென்ட் வித் அவுட் அட்ஜஸ்ட்மென்ட் என்று குறிப்பிட்டு அனுப்புவதாகவும், இதை எல்லாம் பார்க்கும்போது எங்களுக்கே பயமாக இருக்கிறது என்றும், மேலும் சினிமாவில் வளரும் இளம் நடிகைகளின் அம்மா இளமையாக இருந்தால் அவர்களையும் அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு அலைப்பார்கள் என்று கேஸ்டிங் இயக்குனர்கள் இதுகுறித்து தெரிவித்துள்ளனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!