ஆத்தி… நீங்களா இது? உடல் எடை கூடி அடையாளமே தெரியாமல் போன மெட்ராஸ் ஹீரோயின்!

Author: Shree
10 November 2023, 7:49 pm

2014- ல் கேத்ரின் மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் வசனத்தை பேசி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் எப்பயாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார். இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சி காட்டி நடித்து வரும் கேத்ரின் தெரசா கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார்.

கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம். மேலும் இவரின் Hot போட்டோக்களை கண்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். இதனால் கிடைக்கவிருந்த ஒன்னு ரெண்டு வாய்ப்புகளும் பறிபோனது. இதனால் படவாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கும் கேத்ரின் தெரசா தற்போது ஆள் அடையாளமே தெரியாமல் படு குண்டாகிவிட்டார். லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…