விவாகரத்து பாடலாக மாறிய ‘பிறை தேடும் இரவிலே’… வேலை செய்த 4 பேருக்கும் டைவர்ஸ்..!

Author: Vignesh
17 May 2024, 12:54 pm

சினிமா துறையில் பொதுவாக சேர்ந்து நடிக்கும் பிரபலங்கள் காதல் செய்வதும், திருமணம் செய்வதும் வழக்கமான நடக்கும் ஒன்று தான். ஆனால் சிலருக்கு தான் இது ஒர்க் அவுட் ஆகும். அவர்கள் நல்ல ஜோடியாக ரசிகர்களால் பார்க்கப்படுவார்கள். அப்படி எல்லோரும் அமைவதில்லை. காதல் மிதப்பிலே போட்டோ ஷூட், ரீல்ஸ் வீடியோக்களில் மட்டும் காதலை வெளிப்படுத்த தெரிந்தவர்களிடம் நிஜ வாழ்க்கையை அனுசரித்து வாழ தவறி விடுகிறார்கள்.

dhanush

அந்த வரிசையில், ஒரு படத்தின் பாடலுக்கு பணியாற்றிய பிரபலங்கள் விவாகரத்து செய்திருக்கும் தகவல் தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி பலரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, இயக்குனர் 2011ல் வெளியான படம் மயக்கம் என்ன இப்படத்தில், இடம் பெற்ற பாடல் ‘பிறை தேடும் இரவிலே’ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இப்பாடலுக்கு, ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்க பாடகி சைந்தவி பாடி இருந்தார். இந்த பாடலில் பணியாற்றிய நான்கு பேரும் விவாகரத்து பெற்றுள்ள செய்தி தான் தற்போது, பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதனை நெட்டிசன்கள் கலாய்த்தபடி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 272

    0

    0