ஒரே நாளில் கல்யாணம்…. திருமண நாளை ஜோடி ஜோடியா கொண்டாடிய நட்சத்திரங்கள் – வைரல் கிளிக்ஸ்!

Author: Shree
22 August 2023, 9:41 am

மலையாள படங்களின் மாஸ் ஹீரோவான நடிகர் ஃபகத் பாசில் மிகவும் டெடிகேஷனான நடிகர் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்று தான். தன் தந்தையின் அறிமுகத்துடன் சினிமாவில் வந்த இவர் படத்திற்கு படம் புது வித்தியாசமாய் நடிப்பில் மிரள வைத்தார். எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதை நன்றாக உளவாங்கி மிகச்சிறப்பாக நடித்து பெயர் வாங்குவார்.

நடிப்பு அரக்கனாக இவரை பார்த்து மிரண்டுபோனார்கள் சக மலையாள நடிகர்கள். தமிழில் கூட சூப்பர் டீலக்ஸ், வேலைக்காரன், புஷ்பா, விக்ரம் ,மாமன்னன் உள்ளட்ட படத்தில் நடித்துள்ளார். இவர் நடிகை நஸ்ரியாவை காதலித்து 21.8.2014ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். அதேபோல் பிரபல தொகுப்பாளினி கிகி விஜய் நடிகர் சாந்தனு பாக்யராஜை அதே நாளான 21.8.2015ம் ஆண்டு திருமணம் செய்தார்.

இந்நிலையில் இந்த இரு ஜோடியும் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடியுள்ளனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிட செம வைரலாகி வருகிறது. இந்த தம்பதிகளுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ