நயன்தாரா மட்டும் இல்ல.. இத்தனை பிரபலங்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளார்களா?
Author: Vignesh10 October 2022, 11:50 am
பல்வேறு காரணங்களால் கருவுற இயலாத தம்பதிக்கு, குழந்தை பேறு அளிக்கும் செயல்முறையே வாடகைத்தாய் முறை.
இதில் ஒரு ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டை, கொண்டு மருத்துவ முறையில் கருவை உருவாக்கி, பின் வாடகைத் தாயின் கருப்பையில் பொருத்தி, குழந்தை பெற்றெடுக்கப்படும் முறை வாடகைத்தாய் முறையாகும்.
சட்டப்படி ஆண், பெண் என இருவரும் தங்கள் விந்தணு/ கருமுட்டை மூலம் இம்முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளும், சம்பந்தப்பட்ட தம்பதியே அந்தக் குழந்தைக்கு சட்டப்படி பெற்றோர் ஆவர்.
இந்த முறையில் விந்தணு, கருமுட்டை இரண்டும் சம்பந்தப்பட்ட தம்பதியுடையதாக இருப்பதால், வாடகைத்தாயின் மரபு பண்புகளை குழந்தை பெறுவது தவிர்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திருமணமான நான்கு மாதங்களில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் குழந்தை பெற்றிருப்பது சமுகவலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது, மற்ற திரைபிரபாலங்கள் போல இவர்களும் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றிருக்கின்றனர்.
முன்னதாக, பிரியங்கா சோப்ரா-நிக் ஜோன்ஸ் தம்பதியினர் வாடகைத்தாய் மூலமாக தங்களது முதல் குழந்தையை பெற்று பெற்றோர்கள் ஆனார்கள்.
மேலும், கடந்த 2011ம் ஆண்டில் அமீர்கான்-கிரண் ராவ் வாடகைத்தாய் மூலமாக ஆண் குழந்தையை பெற்றுக்கொண்டனர்.
இந்தவரிசையில், 2013ம் ஆண்டில் ஷாருக்கான்-கௌரி கான் வாடகைத்தாய் மூலம் ஆண் குழந்தையை பெற்றுக்கொண்டனர்.
மேலும், கடந்த 2017ம் ஆண்டில் சன்னி லியோன்-டேனியல் வெபர்இரண்டு ஆண் குழந்தைகளை வாடகைத்தாய் மூலமாக பெற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து, கடந்த 2021ல் ப்ரீத்தி ஜிந்தா-ஜென் குட்எனஃப் தாம்பதியினர் வாடகைத்தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆனார்கள்.
பின்னர், கடந்த 2020ம் ஆண்டு ஷில்பா ஷெட்டி- ராஜ் குந்த்ரா தம்பதியினர் தனது இரண்டாவது பெண் குழந்தையை வாடகைத்தாய் மூலமாக பெற்றெடுத்தனர்.
தற்போது நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகைத்தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.