சைலண்டா கல்யாணத்தை முடிச்சுட்டோமா?.. யார் சொன்னா?.. இன்ப அதிர்ச்சி கொடுத்த சித்தார்த்-அதிதி ராவ்..!

Author: Vignesh
28 March 2024, 7:10 pm

44 வயதாகியும் பார்த்த கண்ணனுக்கு இன்னும் இளமையோடு இருப்பவர் நடிகர் சித்தார்த். இவர் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, காவிய தலைவன், அரண்மனை 2, எனக்குள் ஒருவன், அவள், அருவம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது சில பாடல்களையும் பாடியுள்ளார்.தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது எதாவது கருத்து பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

siddharth aditi rao hydari

அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் சிறப்பாக இருந்தாலும் ஏனோ அந்தப் படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறாமல் இருந்தது. கடைசியாக இவர் சித்தா திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய அளவில் மக்களிடையே ரீச் நல்ல விமர்சனத்தையும் கலெக்ஷனையும் குவித்தது.

இவர் 2003இல் மேக்னாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் சில ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து கடந்த 2007ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன் பின்னர் சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சமந்தாவுடன் டேட்டிங்கில் இருந்து பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.

siddharth-updatenews360

இதையடுத்து நடிகை அதிதி ராவ் ஹைதாரியை காதலித்து வருகிறார். இருவரும் ‘மஹாசமுத்திரம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்த போது ஏற்பட்ட பழக்கம் காதலாக உருவெடுத்தது. இவர்கள் இருவரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார்கள். அவ்வப்போது இவர்கள் இருவரும் சேர்ந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும்.

siddharth aditi rao

மிகவும் இளம் வயதிலே காதலித்து திருமணம் செய்துக்கொண்டு பிரிந்துவிட்ட சித்தார்த் அடுத்தடுத்து சமந்தா, அதிதி ராவ் ஹைதாரி என அழகிய நடிகைகளுடன் டேட்டிங் செய்து காதலித்தார். சமந்தாவை பிரிந்தும் சில ஆண்டுகள் கழித்து அதிதி ராவ் உடன் லிவிங் லைஃப் வாழ்ந்து வருகிறார். இந்த காதல் ஆச்சும் திருமணத்தில் முடிந்து சிறந்த கணவன் மனைவியாக இருப்பார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

siddharth aditi rao

இந்நிலையில், தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீரங்கபுரம் கோவிலில் இவர்களுடைய திருமணம் நடைப்பெற்றதாகவும், இதில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே இந்த திருமணமத்தில் கலந்துகொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது சித்தார்த் மற்றும் அதிதி ராவ் குறித்த ஸ்பெஷல் தகவல் தான் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து முடித்துள்ளனர். அதிதி ஸ்பெஷல் போட்டோவுடன் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

இதன் மூலம் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பரப்பப்பட்ட வதங்குகளுக்கு இந்த புகைப்படத்தை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 290

    0

    0