#AK 62வது படத்தில் மீண்டும் இணையும் பிரபலங்கள் : அஜித் ரசிகர்களுக்கு ‘ட்ரீட்’ கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!!
Author: Udayachandran RadhaKrishnan18 March 2022, 8:42 pm
அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக குடும்பத்தினர் இந்த படத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த படம் மீண்டும் ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணியுடன் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் அஜித்தின் அடுத்தடுத்த படத்திற்கான தகவல்கள் பரவின. இயக்குநர் விக்னேஷ் சிவன் இணைவதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இந்த அறிவிப்பை 62வது படத்தை இயக்கும் லைகா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், அஜித் குமாரின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாகவும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், சுபாஷ்கரன் தயாரிக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்கி அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் படத்தின் பிற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.