கோடிகளை அள்ளும் சினிமா பிரபலங்களின் பாடிகார்ட்ஸ்…சம்பளத்தை கேட்டிங்கனா ஷாக் ஆவீங்க..!
Author: Selvan17 December 2024, 8:55 pm
இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பாடிகார்ட்கள் அதிக சம்பளம் பெறுவதுடன், அவர்களின் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருந்து வருகின்றனர்,அந்த வகையில் டாப் பிரபலங்களின் பாடிகார்டுகளின் சம்பள விவரங்கள் இதோ..!
ஷாருக் கானின் பாடிகார்ட் – ரவி சிங்
கடந்த 10 ஆண்டுகளாக ஷாருக் கானின் குடும்பத்தை பாதுகாப்பில் வைத்திருக்கிறார்.இவர் ஆண்டுக்கு 2.7 கோடி சம்பளம் வாங்குகிறார்.
அதிக சம்பளம் பெறும் பாடிகார்ட்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
சல்மான் கானின் பாடிகார்ட் – ஷேரா
கடந்த 29 ஆண்டுகளாக சல்மானுடன் நெருக்கமான உறவில் உள்ளவர்.இவர் அவருடைய நெருங்கிய நண்பர்சில படங்களில் சல்மான் கானுடன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.ஆண்டுக்கு 2 கோடி சம்பளம் பெறுகிறார்.
இதையும் படியுங்க: பேட்ட பாய்ற நேரம் வந்தாச்சு…புஷ்பா 2 ஓடிடி தேதி குறிச்சாச்சு…ரசிகர்கள் குஷி…!
ஆமீர் கானின் பாடிகார்ட் – யுவராஜ்
அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளும் ஆமீருக்கு எப்போதும் துணையாக இருப்பவர் யுவராஜ் இவர் ஆண்டுக்கு 2 கோடி சம்பளம் பெறுகிறார்.
அமிதாப் பச்சனின் பாடிகார்ட் – ஜிதேந்தர் ஷிண்டே
பாலிவுட்டின் மூத்த நடிகருக்கு பாதுகாப்பு அளிக்கிறார்.
இவர் ஆண்டுக்கு 1.5 கோடி சம்பளம் வாங்குகிறார்.
அக்ஷய் குமாரின் பாடிகார்ட் – ஷ்ரெயாஸ்
இவர் ஆண்டுக்கு சம்பளம் 1.2 கோடி சம்பளம் பெறுகிறார்.
தளபதி விஜயின் பாடிகார்ட்கள்
தளபதி விஜயின் இசை வெளியீடு, மாநாட்டுகள், திரைப்பட நிகழ்ச்சிகளில் அவரை இரும்பு தூண்கள் போல பாதுகாக்கும் பாடிகார்ட்கள்,ரசிகர்களின் கவனத்தை தற்போது ஈர்த்துவருகிறது .சமீபத்தில் விஜய், கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் இவர்களின் வேஷ்டி-சட்டை தோற்றம் ரசிகர்களால் கவனிக்கப்பட்டது.
இவர்களின் சம்பளம் குறித்து தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.