தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து 2000 காலகட்டத்தின் ஆரம்பத்தில் பிரபலமான ஹீரோவாக பார்க்கப்பட்டு வந்தவர் தான் அரவிந்த்சாமி. பெண்களின் பேவரைட் ஹீரோவாக ஹேண்ட்ஸ்ம் லுக்கில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த அரவிந்த்சாமி இன்றும் பலரின் பேவரைட் ஹீரோ தான்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கும் அரவிந்த்சாமி கிட்டத்தட்ட 57 வயதாகியும் கூட தற்போது வரை ஹேண்ட்ஸம் ஹீரோவாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.
தொடர்ச்சியாக கிடைக்கும் பட வாய்ப்புகளில் முக்கியமான கதாபாத்திரங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அரவிந்த்சாமி குறித்து பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பேட்டியில் ரகசிய விஷயம் ஒன்றை உடைத்திருக்கிறார் .
அதாவது, அரவிந்த்சாமிக்கு நடிக்க வந்த புத்திதிலேயே பல பெண்கள் அரவிந்த்சாமி போன்ற மாப்பிள்ளை வேண்டும் என அடம் பிடித்தனர். அந்த அளவுக்கு அரவிந்த்சாமி பெண்களின் ஃபேவரைட் ஹீரோவாக இருந்து வந்தார்.
அதேபோல் நடிகைகளும் அரவிந்த்சாமியுடன் நடிக்கும் போது மிகவும் நெருக்கமாக நடிப்பார்களாம். எல்லை மீறி தேவையில்லாத அளவுக்கு மிகவும் நெருக்கமாக ரொமான்டிக் காட்சிகளில் நடிப்பார்களாம். அப்படித்தான் சில நடிகைகள் அவர் முன்பு டீ ஷர்ட் எல்லாம் அணிந்து கொண்டு மிகவும் நெருக்கமாக வந்து. அப்படி இப்படி பேசுவார்களாம் .
இதையும் படியுங்கள்: 2-வது முறையாக விஜய்க்கு ஜோடியான பிரபல நடிகை – “தளபதி 69” ஹீரோயின் இவங்க தான்!
ஆனாலும் அரவிந்த்சாமியும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஒரு சிக்ரெட் எடுத்துக்கொண்டு தனியாக சென்று விடுவாராம். அவ்வளவு கண்ணியமான மனிதராக அரவிந்த்சாமி இருந்துள்ளார். அரவிந்த்சாமிக்கு திரைப்படங்களில் நடிப்பதை காட்டிலும் பிசினஸ் செய்வதில் தான் அதிக ஆர்வம் இருந்ததாம்.
அதனால் தான் அவர் நடிப்பதில் இருந்தே விலகி பிசினஸ் பக்கம் தலை காட்ட ஆரம்பித்தார். ஆனால் மணிரத்தினம் மிகவும் வற்புறுத்தியதால் தான் கடல் திரைப்படத்தில் மீண்டும் தனது இரண்டாவது இன்னிசை தொடங்கினார் என அந்த பத்திரிக்கையாளர் பேட்டியில் கூறி இருக்கிறார்.