ஜிவி பிரகாஷை வம்புக்கு இழுக்கறியா? திவ்யபாரதியை ஒருமையில் திட்டிய பிரபலம்.. புது பஞ்சாயத்து ஆரம்பம்!
Author: Udayachandran RadhaKrishnan15 April 2025, 4:45 pm
ஜிபி பிரகாஷ் – சைந்தவி பள்ளி பருவத்திலேயே காதலித்து வந்தனர். தொடர்ச்சியாக பல வருடமாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்தனர்.
இசை உலகில் இருவரும் கோலோச்சி வந்த நிலையில், ஜிவி இசையமைத்து சைந்தவி பாடும் பாடல்கள் இன்றளவும் ஃபேமஸ். இருவரும் சேர்ந்து டூயட் பாடினால் கண்டிப்பாக அது ஹிட்.
இருவருக்கு ஓரு மகள் உள்ள நிலையில், திடீரென பிரிந்து வாழ்வதாக அறிவித்தனர்.இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதற்காக பிரிந்தார்கள் ஏன் என்ற காரணத்தை இருவரும் கூறவில்லை.
இந்த நிலையில் இருவரின் பிரிவுக்கு நடிகை திவ்ய பாரதி தான் காரணம் என இணையத்தில் தகவல் பரவின. நெட்டிசன்கள் சரமாரியாக திவ்ய பாரதியை விமர்சித்தனர்.

ஒரு கட்டத்தில் இது குறித்து பதிலளித்த திவ்ய பாரதி, திருமணமான ஆண்களுடன் நான் டேட் செய்வதில்லை, தேவையில்லாமல் இசையமைப்பபாளர் குடும்ப பிரச்சனையில் என்னை இழுக்காதீர்கள், நான் சினிமாவில் உள்ள ஆணுடனோ, திருமணமான ஆணுடனோ டேட்டிங் செய்வதில்லை என காட்டமாக பதிலளித்திருந்தார்.

இது குறித்து பேசிய பிரபல சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், திருமணமான ஆணுடன் டேட்டிங் செய்ய மாட்டேன் என திவ்ய பாரதி சொல்லுகிறார். அப்போது திருமணம் ஆகாமல் இருந்தால் டேட்டிங் செய்வியா, இவ்ளோ மோசமா நீ.
இதெல்லாம் என்ன பேச்சு.. ஒழுக்கமாக ஒருத்தரை திருமணம் செய்து அவருடன் வாழ வேண்டியதுதானே.. எனக்கு சைந்தவி, ஜிவி குடும்பத்தை நல்லா தெரியும், ரொம்ப நல்ல பொண்ணு சைந்தவி. அவருக்கு இப்படி நடந்திருக்க கூடாது என கூறினார்.