பீஸ்ட் படத்தை கழுவி ஊற்றிய பிரபல பின்னணி பாடகர் : ஆதங்கத்தில் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க!!
Author: Udayachandran RadhaKrishnan18 April 2022, 5:55 pm
கடந்த ஏப்ரல் 13ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வரும் திரைப்படம் பீஸ்ட். பல்வேறு கட்ட எதிர்ப்பார்புகளுக்கு இடையே வெளியான படம் ரசிகர்களை பூர்த்தி செய்யவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் படம் வெளியான நாள் முதல் நேற்று வரை தொடர் விடுமுறை என்பதால் வசூலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் இன்று முதல் வேலை நாட்கள் என்பதால் படத்திற்கு எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை.
மேலும் கேஜிஎஃப் படம் வெளியாகி பீஸ்ட்டை பதம் பார்த்துள்ளது என்றே கூறலாம். இந்த நிலையில் பீஸ்ட் படத்தை பற்றி பிரபலங்கள் யாரும் விமர்சிக்காத நிலையில் முதன்முறையாக பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ் விமர்சித்துள்ளார்.
பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ் பீஸ்ட் படத்தை கலாய்த்து ட்விட் செய்து இருக்கிறார். “Is Beast a spoof on mega heroic movies” என அவர் கேட்டிருக்கிறார்.