பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியில் வெளியேறும் பிரபலம்.. அதிர்ச்சியளிக்கும் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
27 November 2024, 1:29 pm

தமிழில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் டிவியின் மூலம் பிரபலமான ஸ்ருதிகா, இந்தி பிக் பாஸ் சீசன் 18-ல் கலக்கி வருகிறார்.

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் ஸ்ருதிகா

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த சீசனில், ஸ்ருதிகா அர்ஜுன் போட்டியாளராக களமிறங்கினார். சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி, இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படியுங்க: திருப்பி கொடுக்கும் கர்மா? கடவுளிடம் தஞ்சமடைந்த ஜோதிகா.. பிராயச்சித்தம் தேடும் சூர்யா!

குறிப்பாக, தமிழ் கலாசாரத்தையும், விஷயங்களையும் ஸ்ருதிகா நிகழ்ச்சியில் பகிர்ந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அவரின் பேச்சுகள் மற்றும் அந்த தொடர்புடைய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

ஸ்ருதிகாவுடன் நெருங்கிய தோழியாக இருந்தவர் நடிகை Chum Darang. இருவரும் மிக நெருக்கமாக பழகிய நிலையில், சமீபத்தில் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மோசமான வாக்குவாதமாக மாறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Shrutika Quits From Hindi Bigg Boss 18 Season

இந்த பிரச்சனை காரணமாக ஸ்ருதிகா மன உளைச்சலுக்கு ஆளாகி, நிகழ்ச்சிக்குள் கதறி அழுதுள்ளார். மேலும், நிகழ்ச்சியிலிருந்து வெளியேற விரும்புகிறேன் என்று கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ருதிகா அழுதுகொண்டிருக்கும் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 159

    0

    0