விளக்கு பிடிச்சாங்களா? விஜய்யை விமர்சித்த சத்யராஜ் மகளுக்கு பிரபலம் பதிலடி!
Author: Udayachandran RadhaKrishnan17 April 2025, 11:22 am
சமீபத்தில் திமுகவில் சேர்ந்து புதிய பதவிக்கு தேர்வான சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ், ஒரு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார்.
அது மட்டுமல்லாமல் பாஜகவை விளாசி தள்ளினார். இதற்கு ஒய்ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, அவர் பயன்படுத்திய “விளக்கு பிடிச்சாங்க” என்ற வார்த்தை பொருத்தமற்றது. அந்த வார்த்தையின் பொருளை உங்கள் தந்தையிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படியுங்க: வயசு மட்டும் இடிக்குது… விக்ரமின் மருமகளாகிறார் அந்த நடிகை.?!!
மேடையில் பேசுவதற்கு ஒரு வரம்பு உள்ளது, அது உங்களுக்கு ஏன் தெரியவில்லை என்று புரியவில்லை. பிஜேபி விளக்கை பிடிக்கச் சொல்லவில்லை, விளக்கு ஏற்றவும், ஒலி எழுப்பவும் கூறியது, மனதில் நேர்மறை உணர்வை உருவாக்குவதற்காக.
விவேக் அக்ரிகோத்ரியின் The Vaccine War படத்தைப் பாருங்கள். மேலும், இணையத்தில் கொரோனா காலத்தில் பிஜேபியின் பணிகளைப் பற்றி பல தகவல்கள் உள்ளன, அவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பயன்படுத்திய வார்த்தை மிகவும் தவறானது, அதைத் திருத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் தந்தை சத்யராஜ் ஒரு மாபெரும் நடிகரும், சிறந்த பேச்சாளரும் ஆவார். அவர் மீது எனக்கு பெரும் மரியாதை உண்டு, கொள்கை ரீதியாக எதிர்ப்பு இருந்தாலும். ஒரு தோழியாக, இதுபோன்றவற்றைத் திருத்திக் கொண்டால் நல்லது என்று கேட்டுக் கொள்கிறேன்.