கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் பல கோடி மதிப்புள்ள சென்னை வீட்டை வாங்கிய பிரபலம் : அட இவரா?

Author: Udayachandran RadhaKrishnan
10 February 2022, 5:58 pm

ஒரு சினிமாவை தயாரிப்பது என்பது சுலபமான காரியம் கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே. அப்படித்தான் புதிய இயக்குநர்களை வைத்து சிறு பட்ஜெட் செலவு செய்து படமெடுத்தவர் அன்பாலயா பிரபாகரன்.

அன்பாலயா பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர். 1988ல் அர்ஜுன் நிரோஷாவை வைத்து பட்டிக்காட்டு தம்பி என்ற படத்தை தயாரித்தார்.

தொடாந்து ராதா பாரதி என்ற புதிய இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்தார். அவர் எடுத்த படம்தான் வைகாசி பொறந்தாச்சு,, பிரசாந்த் கதாநாயகனாக அறிமுகமான படம். படமும் வெற்றி பெற்று, வசூலை குவித்தது.

பின்னர் கஸ்தூரி ராஜா இயக்கிய ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தை தயாரித்தார். தொடர்ந்து தெற்கு தெரு மச்சான், முறை மாப்பிள்ளை, கண்ணோடு காண்பதெல்லாம் போன்ற படங்களை தயாரித்தார்.

அன்பாலயா பிரபாகரன் வக்கீலுக்கு படித்தவர். பின்னர் நடிகராக, வில்லனாக, தயாரிப்பாளராக விநியோகஸ்தர் என பல அவதாரத்தை எடுத்தவர். இவர் சென்னை அடையாறில் உள்ள பழம் பெரும் நடிகர் சரோஜா தேவி பங்களாவை விலைக்கு வாங்கியவர்.

anbalaya-prabhakaran-daughter-wedding1

கடந்த 2014ல் கூட தனது மகளின் திருமணத்தை வெகு விமர்சையாக நடத்தியிருந்தார் பிரபாகரன். தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த கலைஞர்கள் இந்த திருமணத்திற்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • actress who starred with Ajith and Vijay is in a pathetic state படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!