இதெல்லாம் மக்களுடன் ஒட்டவே ஒட்டாது… விஜய்யை ‘அது’ என ஒருமையில் பேசிய பிரபலம்..!
Author: Udayachandran RadhaKrishnan1 March 2025, 9:22 am
சினிமாவுக்கு முழுக்கு போட உள்ள விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துள்ளார். மேலும் அரசியலில் தனது முழு நேரத்தை செலவிட உள்ளதால் அவ்வப்போது கட்சி கூட்டத்தில் பங்கேற்று வருகிறார்.
இதையும் படியுங்க: அதிகாலையிலேயே அதிர்ச்சி… சிலிண்டர் விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
இந்த நிலையில் விஜய்யை மற்ற கட்சிகளில் உள்ள நடிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். திமுகவுக்கு ஆதரவு தரும் முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கருணாஸ் தற்போது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

விஜய் குறித்து அவர் பேசியதாவது, பாசிசத்துக்கும் பாயாசத்துக்கும் வித்தியாசம் தெரியாத பாதரசம், பாதரசம் யாருடனும் ஒட்டாது, அது மக்களுடன் ஒட்டாது என ஒருமையில் விமர்சித்துள்ளார்.
