மகாநதி படத்தில் நடித்த மலையாள முன்னணி ஹீரோ; ஆச்சரியமூட்டும் உண்மை

Author: Sudha
3 ஜூலை 2024, 1:29 மணி
Quick Share

1993 ஆம் ஆண்டு இயக்குனர் சந்தான பாரதியின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மகாநதி

இந்த திரைப்படத்தில் தன் நண்பனால் ஏமாற்றப்பட்டு மகளை தொலைத்து விட்டு தேடும் தந்தையாக கமல்ஹாசன் நடிப்பில் அசத்தியிருப்பார்

இதே போன்றதொரு திரைப்படம் மலையாளத்தில் மகாநதி வெளிவருவதற்கு பத்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்திருக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆம் அதுதான் உண்மை.

மலையாளத்தில் 1983 ஆம் ஆண்டு பிரேம் நசீர் நடிப்பில்
P. A. பாக்கர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ச்சாரம் பிரேம் நசீர் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அவருடைய மகள் ப்ரீத்தி.

அம்மா இல்லாத ப்ரீத்தி தனிமையை உணர்வதால் தவறான நட்பின் வழிக்கு தள்ளப்படுகிறார்.

ஒருநாள் எதிர்பாராத விதமாக அவர் காணாமல் போகிறார் பிரேம் நசீர் அவரை தேடவே அவர் பல நாட்களாக கல்லூரிக்கு வரவில்லை என தெரிய வருகிறது கடைசியில் மகளுடைய ஒரு தோழி மூலமாக அவருக்கு ஒரு தீவிரவாதி உடன் பழக்கம் இருந்ததையும் அவருடன் மும்பை சென்று விட்டார் என்பதையும் அறிந்து கொள்கிறார்

பிறகு தன்னுடைய மகளைத் தேடி மும்பைக்கு செல்கிறார் அங்கு பல இடங்களில் தேடியும் தன்மகள் கிடைக்காமல் சோர்வடைகிறார். ஒரு கடையில் வைக்கப்பட்டுள்ள ஒரு புத்தகத்தில் தன் மகளின் நிர்வாண புகைப்படம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். தன் மகள் சிவப்பு விளக்கு ஏரியாவில் இருப்பதை அறிந்து பிறகு அவரை எப்படி மீட்கிறார் என்பதே கதை.

இந்த மலையாள திரைப்படம் முழுக்க முழுக்க மகாநதி கதையை ஒத்திருக்கும். சில கதைகள் ஒன்றுக்கொன்று ஒரே மாதிரியாக தோன்றினாலும் கூட அதை ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்கும் விதம் வேறுபடுவதால் பார்ப்பதற்கு அவை சுவாரசியத்தை தருகிறது.

  • seeman vs vijay கேவலப்படுத்திய சீமான்… கூடிய கூட்டம் : விஜய் எடுத்த அதிரடி முடிவு..நாளை முக்கிய அறிவிப்பு!
  • Views: - 133

    0

    0