மாட்டிற்கு பால் கரக்கும் வீடியோ.. புது தொழிலை ஆரம்பித்த நடிகை சைத்ரா ரெட்டி..!
Author: Vignesh11 October 2023, 12:30 pm
சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நட்சத்திரங்களும் தொகுப்பாளினிகளும் அதிக அளவு மக்களிடையே பேமஸ் ஆகி வருகின்றனர். அதற்கு காரணம் இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்கள் தான். அந்த வரிசையில் தற்போது சைத்ரா ரெட்டியும் இணைந்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்து இருந்தார் சைத்ரா ரெட்டி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சீரியலிலும் நடித்து வருகிறார். ரக்கட் என்ற படத்திலும் நடித்துள்ளார். முக்கிய ரோலில் பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து வந்த சைத்ரா, அஜித்தின் வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்திருந்தார். சமீபத்தில் தான் ராகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஏற்கனவே ரசிகர் வட்டம் உருவாக்கியிருந்த நிலையில், சமீபமாக இன்ஸ்டாகிராமால் இளசுகளும் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். இவர் போடும் போஸ்ட்டுகள் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம்.
இந்நிலையில், சைத்ரா ரெட்டி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கூடிய சீக்கிரமே 50 மாடுகளை வாங்கி சொந்தப் பண்ணையை ஆரம்பிக்கப் போவதாக கூறி மாட்டிற்கு பால் கரக்கும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.