பிரபலங்களின் விவாகரத்துக்கு இதான் காரணம்: சினேகா-பிரசன்னா சொன்ன பதில்…அட இது தெரியாம போச்சே…!

Author: Selvan
3 December 2024, 8:00 pm

பிரபலங்கள் மற்றும் இல்லற வாழ்வு

சமீப காலமாக திரையுலகம் சேர்ந்த நபர்கள் விவாகரத்து பண்ணுவது வாடிக்கையான நிகழ்வாக மாறியுள்ளது.சில வாரங்களுக்கு முன்பு கூட ஏ.ஆர்.ரகுமான்-சாய்ரா பானு தம்பதியினர் பிரிவதாக திரையுலகை அதிர்ச்சியாக்கினர்.

Tamil actress Sneha interview highlights

ஆனால் சில சினிமா ஜோடிகள் தங்களுடைய இல்லற வாழ்கையை சுமுகமாக நடத்திவருகின்றனர்.அந்தவகையில் சூர்யா-ஜோதிகா,சினேகா-பிரசன்னா போன்ற பல தம்பதியனர்கள் எந்த ஒரு சலசலப்பு இல்லாமல் இருக்கின்றனர்.

அந்த வகையில் நடிகை சினேகா நடத்தி வரும் “சினேகலயா சில்க்ஸ் சார்பில் ஒரு நிகழ்ச்சி நடத்தினார்.அதில் பத்திரிகையாளர் ஒருவர் விவாகரத்து பற்றி நீங்க என்ன நினைக்குறீங்கனு கேட்ட போது திரை உலகினரின் வாழ்க்கையில் ஏற்படும் விவாகரத்து குறித்து அறிவுரை யாரும் வழங்க முடியாது.

அது அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையாக உள்ளது.அதற்கு நாம் கண்டிப்பாக மதிப்பளிக்க வேண்டும் என்றும்,கங்குவா படத்திற்கு வந்த மோசமான தோல்வி பற்றிய கேள்விக்கு, “யாரும் மோசமான படம் கொடுக்க வேண்டும் இசை கொடுக்க வேண்டும் என படம் பண்ணுவதில்லை .அந்த காலத்து பாடல்களும் இந்த காலத்து பாடல்களையும் மக்கள் ரசிக்க தான் செய்கிறார்கள்,பாடல் பிடித்திருக்கிறதா இல்லை என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அவர்கள்தான் நீதிபதிகள்.

அதேபோல, பிரபலங்களின் விவாகரத்து சமீபகாலத்தில் அதிகரித்து வருகிறது. பிறரின் தனிப்பட்ட வாழ்க்கையில் கருத்து சொல்ல முடியாது. நல்ல புரிதல் இருந்தால் எந்த திருமண வாழ்க்கையும் நீடித்திருக்கும்” என்றனர்.

  • Jayalalitha is my inspiration i will entry in politics says Varalakshmi அரசியலுக்கு வரும் பிரபல வாரிசு நடிகை… ஜெயலலிதா தான் வழிகாட்டி என பெருமிதம்!!