சந்திரமுகி காதலன் வினீத்தை நியாபகம் இருக்கா….? இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா!

Author:
27 August 2024, 5:08 pm

ஒரு காலகட்டத்தில் பிரபலமான நடிகராக இருந்த எத்தனையோ பேர் பின்னர் மார்க்கெட் இழந்து போனதாலும் புது நடிகர்களின் வரவாலும் ஆல் அட்ரசே இல்லாமல் போனதுண்டு.

ஒரு காலத்தில் அவர்கள் சினிமாவின் உச்சத்தில் கொடிகட்டி பறந்து கொண்டு இருந்த நடிகர்களாக இருந்தாலும் கூட பின்னர் ஆல் அட்ரஸ் இல்லாத அளவுக்கு அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது உண்டு.

அப்படி பல பேர் லிஸ்ட் அவுட் ஆகிய நடிகர் நடிகைகள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். அப்படி பார்க்கப்படும் ஒரு நடிகர் தான் நடிகர் வினித் 96 காலகட்டத்தில் டாப் நாயகனாக கலக்கி வந்த வினீத் கேரளாவை பூர்வீகமாக கொண்டு மலையாள படங்களை தாண்டி தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து தனக்கான தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

ஆவாரம் பூ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த நடிகர் வினீத்திற்கு முதல் படத்திலிருந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. அதன் பிறகு ஜாதி மல்லி, காதல் தேசம், சிம்மராசி, சுயம்வரம், சந்திரமுகி ,வேதம், பிரியமான தோழி, ஒளியின் ஓசை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சந்திரமுகி படத்தில் சந்திரமுகியின் காதலனாக நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். கடந்த 2004 ஆம் ஆண்டு பிரசில்லா மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகர் வினித்திற்கு ஒரு அழகான மகள் இருக்கிறார். இந்நிலையில் தற்போது நடிகர் வினீத் தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 160

    0

    0